இந்தப் பக்கம் சினிமா.. அந்த பக்கம் அரசியல்.. 'இந்தியன் 2' ஷூட்டிங் எப்போது? கமல் அதிரடி முடிவு!

By

சென்னை: கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் மீண்டும் தொடங்குகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து, 1996 ஆம் ஆண்டு வெளியான படம் 'இந்தியன்'.

மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், சுகன்யா, நெடுமுடிவேணு, கவுண்டமணி உள்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். சித்தார்த், நெடுமுடிவேணு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இதன் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்தது.

3பேர் பலியான விபத்து

3பேர் பலியான விபத்து

பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நசரத்பேட்டை அருகேயுள்ள, ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்தபோது, ராட்சத கிரேன் அறுந்து கீழே விழுந்தது. இதில், உதவி இயக்குநர் கிருஷ்ணா (34), ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன் (60), புரொடக்‌ஷன் அசிஸ்டென்ட் மது (29) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

இந்த விபத்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா வைரஸ் காட்டுத்தீயாகப் பரவியது. அதைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக, ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன.

மீண்டும் ஜனவரியில்

மீண்டும் ஜனவரியில்

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் ஜனவரியில் மீண்டும் தொடங்குகிறது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் கமல், ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரியில் இதில் கலந்து கொள்கிறார். இந்தப் படத்தை விரைவில் முடித்துவிட்டு அரசியல் பணிகளில் அவர் கவனம் செலுத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

நடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை | Pa.Ranjith exclusive Hint
ஒரே கட்டமாக

ஒரே கட்டமாக

இந்தப் படத்துக்கு இடையே அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தின் ஷூட்டிங்கிலும் பங்கேற்கிறார். அந்த படத்தையும் ஒரே கட்டமாக முடிக்க கமல் முடிவு செய்துள்ளார். விக்ரம் படம், இந்தியன் 2 படத்துக்கு முன்பே ரிலீஸ் ஆக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X