ஆபரேஷனுக்குப் பிறகு கமல்ஹாசன் ரெடி... அடுத்த மாதம், முதல் வாரத்தில் தொடங்குது 'இந்தியன் 2' ஷூட்டிங்

By

Recommended Video

Shruthi Hassan B'Day Street dance | Kamal Hassan | Laabam | Krack

சென்னை: காலில் செய்துகொண்ட ஆபரேஷனுக்குப் பிறகு அடுத்த மாதம் தொடங்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்ள இருக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியான படம் 'இந்தியன்'.

மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், சுகன்யா, நெடுமுடிவேணு, கவுண்டமணி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

இதையடுத்து, இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். சித்தார்த், நெடுமுடிவேணு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இதன் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்தது.

ஆக்‌ஷன் காட்சிகள்

ஆக்‌ஷன் காட்சிகள்

இதன் இரண்டாவது ஷெட்யூல் போபாலில் நடந்தது. அங்கு நடந்தப் படப்பிடிப்பில் சுமார் இரண்டாயிரம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களுடன் கமல் மோதும் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. நடிகை ரகுல் பிரீத் சிங்கும் இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அடுத்த கட்டப் படப்பிடிப்பு குவாலியரில் நடந்தது.

காலில் ஆபரேஷன்

காலில் ஆபரேஷன்

இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது பொருத்தப்பட்டிருந்த கம்பியை அகற்றுவதற்கான சிகிச்சை கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது. இதனால் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தார் கமல்ஹாசன். இப்போது அவர் ரெடியானதை அடுத்து அடுத்த மாதம் தொடங்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.

 ஸ்பெஷல் மேக்கப்

ஸ்பெஷல் மேக்கப்

அடுத்த ஷெட்யூல் பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபியில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படப்பிடிப்பில் நடிகை காஜல் அகர்வால் கலந்துகொள்கிறார். 85 வயது பாட்டியாக நடிக்க அவருக்கு ஸ்பெஷல் மேக்கப் போடப்படுகிறது. படத்துக்காக, அவர் கேரள பாரம்பரிய தற்காப்புக் கலையான களறிபயட்டுவைக் கற்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X