அந்த ஹிட் படத்தின் 2 ஆம் பாகத்துக்கும் ஓகே சொல்லிட்டாராம் கமல்.. இதுல ராகவன் எந்த நாட்டுக்கு போவார்?

By

சென்னை: சூப்பர் ஹிட்டான தனது இன்னொரு படத்தின் 2 ஆம் பாகத்திலும் நடிகர் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

Vettaiyadu Vilayadu part 2 Official Announcement | Kamal Hassan | GVM

நடிகர் கமல்ஹாசன், இந்தியன் படத்தின் 2 ஆம் பாகத்தில் நடித்து வருகிறார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

இதில், காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உட்பட பலர் நடிக்கின்றனர்.

வேட்டையாடு விளையாடு

வேட்டையாடு விளையாடு

இதன் ஷூட்டிங்கில் நடந்த விபத்து காரணமாக, படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்த நடிகர், நடிகைகள் மற்ற படங்களில் நடிக்கச் சென்றுவிட்டனர். இந்நிலையில், வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார்.

அமெரிக்கா

அமெரிக்கா

கமல்ஹாசன் நடிப்பில் 2006 ஆம் ஆண்டில் வெளியாகி ஹிட்டான படம் இது. ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். குற்றவாளிகளைத் தேடி அமெரிக்கா செல்லும் கமல், அவர்களை கண்டுபிடித்து திரும்புவது போல கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் வரவேற்பைப் பெற்றிருந்தது.

வேல்ஸ் இன்டர்நேஷனல்

வேல்ஸ் இன்டர்நேஷனல்

இதன் பாடல்களும் சூப்பர் ஹிட்டாயின. கடந்த சில வருடங்களாகவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றி பேசிவந்தார் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். இப்போது அந்த படத்தை அவர் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க இருக்கிறார். இவர்தான் கவுதம் மேனனின், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை ரிலீஸ் செய்வதற்கு உதவி இருந்தார்.

கமல்ஹாசன் ஓகே

கமல்ஹாசன் ஓகே

அவர் இயக்கும், ஜோஸ்வா படத்தையும் தயாரித்து வருகிறார். சமீபத்தில் ஜிப்ஸி டீமுடன் கமல்ஹாசனைச் சந்தித்தனர், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனும் ஐசரி கணேஷூம். இந்த சந்திப்பின்போது வேட்டையாடு விளையாடு படத்தின் அடுத்த பாகம் பற்றி பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு கமல்ஹாசன் ஓகே சொல்லிவிட்டதாகவும் இன்னும் சில மாதங்களில் இதுபற்றிய அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X