Happy Birthday Kamal Haasan: உலகநாயகன் கமல்ஹாசனின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சென்னை: உலகநாயகன் என திரையுலகமே கொண்டாடி மகிழும் கமல்ஹாசனின் 68வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கி விக்ரம் வரை ஏகப்பட்ட வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவுக்கும் ரசிகர்களுக்கும் தந்த சகலகலா வல்லவன் கமல்ஹாசன். அடுத்து இந்தியன் 2 எனும் பாக்ஸ் ஆபிஸ் பிரம்மாஸ்திரத்துடன் கோலிவுட்டை தாக்க காத்திருக்கிறார்.

100 கோடிக்கு மேல் சமீபத்தில் கமல்ஹாசனின் சம்பளம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஒட்டுமொத்த சொத்த மதிப்பு எத்தனை கோடி என்பது குறித்து இங்கே பார்ப்போம்..

கமல் எனும் கலைஞன்

கமல் எனும் கலைஞன்

நவம்பர் 7ம் தேதி, 1954ம் ஆண்டு பரமக்குடியில் ஸ்ரீனிவாசன், ராஜலக்‌ஷ்மி தம்பதியினருக்கு மகனாக பிறந்த கமல்ஹாசன் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் ஒரு அபார கலைஞனாக தனது 68வது அகவையிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக மாறி இருக்கிறார். சரிகாவை திருமணம் செய்த கமல் பின்னர் அவரை விவாகரத்து செய்தார். ஸ்ருதிஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் என கமல்ஹாசனுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் பிரபல நடிகைகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

450 கோடி நாயகன்

450 கோடி நாயகன்

விஸ்வரூபம் 2 படம் சரியாக போகாத நிலையில், அடுத்ததாக வெயிட்டாக ஒரு படம் பண்ணவேண்டும் என நினைத்து ஷங்கர் உடன் மீண்டும் இணைந்து இந்தியன் 2வை ஆரம்பித்தார். ஆனால், அந்த படம் தாமதமாகவே லோகேஷ் உடன் கைகோர்த்து கமல் நடித்த விக்ரம் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி 450 கோடி வசூலை ஈட்டி நாயகன் மீண்டும் வந்து விட்டார் என ரசிகர்களை பாட வைத்துள்ளது.

ஆண்டு வருமானம்

ஆண்டு வருமானம்

கமல்ஹாசன் சினிமா, விளம்பரம், பிக் பாஸ், தயாரிப்பு என ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு 5 மில்லியன் டாலர் வரை சம்பாதித்து வருவதாக கூறுகின்றனர். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 40 கோடி ரூபாய். ஆனால், இந்த ஆண்டு அந்த கணக்கு தாண்டியிருக்கும் என்றே தெரிகிறது.

லண்டனில் வீடு

லண்டனில் வீடு

சென்னையில் வீடு மற்றும் அலுவலகம் பல ஆண்டுகளாக கமலுக்கு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். 19 கோடி ரூபாய் மதிப்பில் அவருக்கு சென்னையில் வீடு ஒன்றும் ஒட்டுமொத்தமாக வணிக அலுவலகங்கள் மற்றும் நிலங்கள் என சேர்த்து 92 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக கூறுகின்றனர். இவை போக லண்டனில் 2.5 கோடிக்கு ஒரு வீடு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சொகுசு கார்

சொகுசு கார்

ரஜினிகாந்த் விஜய், அஜித் போல கமலுக்கு கார்கள் மீதெல்லாம் அதிக நாட்டம் இல்லை என்றே தெரிகிறது. BMW 730LD மற்றும் Lexus Lx 570 என இரு சொகுசு கார்கள் மட்டுமே ஒட்டுமொத்தமாக 3.79 கோடி மதிப்புக்கு உள்ளதாக கூறுகின்றனர். விக்ரம் படத்தின் வெற்றியை முன்னிட்டு தனது ரோலக்ஸ் வாட்ச்சை கூட சூர்யாவுக்கு கொடுத்து விட்டார் கமல்.

மொத்த சொத்து

மொத்த சொத்து

65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருந்து வரும் கமல்ஹாசன் பல படங்கள் தயாரித்து நஷ்டம் அடைந்துள்ளார். சினிமாவில் சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமாவுக்கே செலவு செய்துள்ளார் என்று கூறுகின்றனர். ஆனாலும், ஒட்டுமொத்தமாக அவரிடம் 50 மில்லியன் டாலர் சொத்து உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளன. அதாவது இந்திய மதிப்பில் 400 கோடி ரூபாய் என்கின்றனர். ஆனால், சமீபத்தில் கமல் அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்த சொத்து விபரத்தில் அவருக்கு 177 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாகவே குறிப்பிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X