பேட்ஜை கொடுக்க வைத்து நல்லா கொளுத்திப் போட்ட கமல்.. சும்மா பத்திக்கிட்டு எரியுது பிக் பாஸ் வீடு!
சென்னை: வழக்கமாக பிக் பாஸ் தான் நாரதர் வேலை செய்வது, கொளுத்திப் போடுவது, போட்டியாளர்கள் மத்தியில் சண்டை மூட்டி விடும் வேலையை செய்வார். கமல் வந்து பஞ்சாயத்து செய்து சமாதானம் செய்யும் வேலையை செய்வார்.
ஆனால், இந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளர்கள் என்ன இன்னும் நல்லா அடிச்சிக்கவே மாட்றாங்க என நினைத்த கமல் பஞ்சாயத்துக்கு பெரும் பஞ்சமாக இருக்கே என அவரே களத்தில் இறங்கி ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் போட்டியாளர்களுக்கு பேட்ஜ் கொடுத்து கொளுத்திப் போடும் வேலையை சிறப்பாக செய்துள்ளார்.
இது வரும் வாரங்களில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களுக்கு தெரியாமலே
நாமினேஷனின் போது யாரெல்லாம் யாரையெல்லாம் என்ன சொன்னாங்க என்கிற வார்த்தைகளை பேட்ஜ்களாக கொடுத்து யார் யாரையெல்லாம் நாமினேட் செய்தார்கள் என்பதையே அவர்களை வைத்தே மறைமுகமாக சொல்ல வைத்து விட்டார் கமல்.

என்ன ஆங்கிலம் விளையாடுது
பிக் பாஸ் வீட்டில் தமிழில் தான் பேச வேண்டும் என்றும் ஆங்கில பிரயோகம் அதிகம் இருக்கக் கூடாது என சொல்லி விட்டு பேட்ஜ் கொடுக்கும் போது மட்டும் அனைத்துமே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டு இருந்தது ரசிகர்களை சற்றே கடுப்பாகி இருந்தது. ஆனால், தமிழ் புரியாமல் ஆங்கிலம் மட்டுமே அதிகம் தெரிந்த போட்டியாளர்களுக்கு சுளீர் என படும் அளவுக்கு இந்த வாசகங்கள் அமையும் என்றே இதை பயன்படுத்தி கொளுத்திப் போட்டுள்ளனர்.

பேட்ஜ் குத்துங்க
போலியாக இருப்பவர், வேலையே செய்யாமல் இருப்பவர், தலைக்கனம் கொண்டவர், ஒரு நிலையில் இல்லாதவர், வெறுப்பை உமிழ்பவர் போன்ற அர்த்தங்கள் கொண்ட ஆங்கில பேட்ஜ்களை ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் கொடுக்க வைத்து சும்மா பிரச்சனையை ஆரம்பித்து வைத்து விட்டார் கமல்.

இசைக்கு தலைக்கனம்
நெருப்பு காயினை வைத்துக் கொண்டு இந்த வாரம் ஆட்சி செய்த இசைவாணிக்கு தலைக்கனம் ஏற்பட்டதாக அவருக்கு இமான் அண்ணாச்சி, அக்ஷரா உள்ளிட்டோர் பேட்ஜ்களை கொடுத்தனர். குழப்பத்தில் இருந்தார் என்கிற பேட்ஜும் அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், இசை அப்படியெல்லாம் இல்லை சார் என மறுத்து விட்டார்.

அக்ஷரா பாவனி பிரச்சனை
அக்ஷராவுக்கும் பாவனிக்கும் ஆரம்பத்தில் இருந்தே செட் ஆகவில்லை. ஒரு வேலை யார் அழகி என்பதில் இருவருக்கும் இடையே போட்டி இருக்குமோ? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அக்ஷரா பாவனிக்கு பேட்ஜ் எதையும் கொடுக்காத போதும் அவரை மறுபடியும் சீண்டும் விதமாக பாவனி அவருக்கு பேட்ஜை கொடுத்து பற்ற வைத்துள்ளார்.

நிரூப் அக்ஷரா சண்டை
பேட்ஜ் கொடுத்த விவகாரத்தில் நிரூப்புக்கும் அக்ஷராவுக்கும் இடையே கமல் முன்பாகவே வாக்குவாதம் ஆரம்பித்தது. ஏன் அப்படி சொல்ற? உனக்கும் எனக்கும் என்ன பிரச்சனை என அக்ஷராவிடம் நிரூப் நேரடியாக கேட்க, நீ பாவனியுடன் பேசுறது பிடிக்கலைன்னா அக்ஷரா சொல்ல முடியும் சாதாரண காரணங்களை சொல்லி சமாளிக்க முயன்று சொதப்பி விட்டார்.

இனி சிறப்பா வெடிக்கும்
வரும் வாரம் தீபாவளி வாரம் என்பதால் போன சீசன் போல இந்த சீசனிலும் கொண்டாட்டம் மட்டுமே இடம் பெறாமல் இருக்க கமல் சிறப்பாக கொளுத்திப் போட்டுள்ளது வரும் வாரத்தில் சரவெடியாக வெடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











