ஆணும் பெண்ணும் பழகுனா.. 50 நாட்களில் பாலாஜி இவ்ளோ சொல்லிக் கொடுத்துருக்காராம்.. கமல் கலாய் அல்டி!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் தொடங்கி 50 நாட்கள் ஆகி விட்டது என கமல் புரமோவில் சொல்லும் போது, உருப்படியா ஒரு எபிசோடும் வரலையே என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கமல்ஹாசன் இந்த அலர்ட் கொடுப்பதே, இன்னும் 50 நாட்களிலாவது உருப்படியாக விளையாடுங்கள் என எச்சரிக்கை மணி அடிப்பதாகவே தெரிகிறது.

உடனே டக்குன்னு எந்திரிச்ச பாலாஜி, ஒரு லிஸ்ட் போடுறாரு பாருங்க.. கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது.

கமாண்டோ கமல்

கமாண்டோ கமல்

அகோடபர் 4ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 50வது நாள் எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. சஃபாரி டிரெஸ்லாம் போட்டுக்கிட்டு ஒரு கமாண்டோ மாதிரி கமல் சார் புரமோவில் அழகாக காட்சி தருகிறார். நேத்து டிரெஸ் இதை விட சூப்பர் ஸ்டைலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாதிக் கிணறு

பாதிக் கிணறு

பிக் பாஸ் நிகழ்ச்சி 4வது சீசன், ஏகப்பட்ட கூட்டத்தோட அப்படியே பாதிக் கிணற்றை தாண்டி விட்டது. இனியும் லக்கேஜ்ஜை ஏற்றாமல், அதிரடியாக கழித்துக் கட்ட தொடங்கினால் தான் நிகழ்ச்சி சூடு பிடிக்கும். தட்டிக் கொடுத்தது எல்லாம் போதும் கமல் சார் நல்லா தட்டிக் கேளுங்க என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தேவையில்லாத ஆணி

தேவையில்லாத ஆணி

ஏகப்பட்ட தேவையில்லாத ஆணிக்கள் புடுங்கப் படாமல் இன்னமும் பிக் பாஸ் வீட்டில் இருந்து கொண்டு ஏகப்பட்ட மிக்சர் பாக்கெட்டுகளை காலி செய்து வருகின்றன. அதிரடியாக கருணை காட்டாமல் சாட்டையை எடுத்து சுழற்றி அடித்து துரத்தினால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாகும்.

பங்களிப்பு என்ன

பங்களிப்பு என்ன

50 நாட்களாக பிக் பாஸ் வீட்டில் இருந்தீங்களே உங்களோட பங்களிப்பு என்ன என கமல் கேட்க, பங்களிப்பா அப்படி நாங்க எதுவுமே பெருசா பண்ணவில்லையே என்பது போலவே அனைத்து ஹவுஸ்மேட்களும் முழித்தனர். ஆனால், ஒவ்வொருவரும் நான் அதை பண்ணேன், இதை பண்ணேன் என பாலாஜி பேசுனது போல கூச்சமே இல்லாமல் பேசுவார்கள்.

எவ்ளோவா சொல்லிக் கொடுத்துருக்கேன்

எவ்ளோவா சொல்லிக் கொடுத்துருக்கேன்

பிக் பாஸ் வீட்டில் இந்த 50 நாட்களில் எப்படி நடந்துக்கணும்னு சொல்லிக் கொடுத்துருக்கேன்.. (ஆஹான்..) எப்படி நடந்துக்கக் கூடாதுன்னு சொல்லிக் கொடுத்துருக்கேன்.. என பாலாஜி பேசுவதை முதல் புரமோவில் பார்த்த ரசிகர்கள், அதைத் தான் தினமும் பண்றியேப்பா வேற ஏதாவது சொல்லு என்பது போல கேட்க, அடுத்து அந்த மேட்டரை பத்தி பேச ஆரம்பித்தார்.

ஆணும் பெண்ணும் பழகுனா

ஆணும் பெண்ணும் பழகுனா

ஆணும் பெண்ணும் ஒண்ணா பழகுனா அது வந்து காதல் கிடையாதுன்னு சொல்லிக் கொடுத்துருக்கேன் என மீண்டும் ஒருமுறை தெளிவாக பாலாஜி நான் ஷிவானியை லவ் பண்ணவில்லை என்பதை தெளிவுப் படுத்தியுள்ளார். இதுக்கு மேலாவது திருந்துங்கப்பா, பாலாஜி ஷிவானியை லவ் பண்ணல.. ஷிவானிதான்?

கமல் கலாய் அல்டி

கமல் கலாய் அல்டி

பாலாஜி முருகதாஸ் ரொம்ப உருக்கமாக தான் பிக் பாஸ் வீட்டில் செய்திருக்கும் சாதனைகளை எல்லாம் ஒரு டீச்சர் பண்ண சாதனைகளை போல சொல்லிக் கொண்டிருக்கும்போது, டக்குன்னு பிரேக் போட்ட கமல், பாலாஜி நீங்க வேகமா எண்றீங்களா.. இல்லையே என கேட்டு பங்கமாக கலாய்த்துத் தள்ளி விட்டார். ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் சிரித்து பாலாஜியை வெட்கப்பட வைத்துவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X