ஓய்வெடுக்கும் அறை.. நல்லா ஜாலியா.. அங்கேயும் போய் ரெஸ்ட் எடுத்தீங்களா.. சுச்சியை நக்கலடித்த கமல்!
சென்னை: வயதானவர்களையும் உடம்பு முடியாதவர்களையும் போட்டியாளர்களாக கூட்டிக் கொண்டு வந்து விட்டு, வந்த உடனே திருப்பி அனுப்புவது.
சுரேஷ் தாத்தாவை அதிரடியாக அனுப்பியது போல, இந்த வாரம் சுச்சியையும் அனுப்ப போறாங்க என்கிற உறுதியான தகவல்கள் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், சனிக்கிழமை நிகழ்ச்சியில் சுச்சியை நல்லாவே கமல் நக்கலடித்து பேசினார்.

ஓய்வெடுக்கும் அறை
போரிங் போட்டியாளரை இன்னும் போரிங்காக மாற்றுவதற்கும், எந்தவொரு வேலையையும் செய்யாமல், நல்லா படுத்துத் தூங்க வைப்பதற்கான இடமாக இந்த சீசனில் ஜெயில் என்கிற வார்த்தையையும் மாற்றி ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டுள்ளது. அங்க எவ்ளோ நேரம் தூங்கினாலும் நாய் குரைக்காது.

பாலாவை கண்டுக்கல
ஜெயிலுக்கு போகமாட்டேன்னு அடம் பிடித்தது. கண்ணாடி அறைக்குள் சுச்சியிடம் கத்தி பேசியது, பாத்ரூமில் கத்தி அதன் டோரை அடித்தது என ஒரு வார்த்தை கூட பாலாவை கண்டு கொள்ளாத கமல், ஜெயிலுக்குப் போன அனுபவங்கள் குறித்து, சுச்சியிடம் மட்டுமே கேட்டுத் தெரிந்து கொண்டார்.

நல்லா ரெஸ்ட் எடுத்தீங்களா
பாலாஜியுடன் மல்லுக் கட்டவே நேரம் சுச்சிக்கு சரியாக இருந்தது. சண்டை முடிந்த பிறகு, தூங்கும் பாலாவுக்கு விசிறி விட்டுக் கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் சுச்சி. இதையெல்லாம் ஜாலியாக ரசித்துப் பார்த்து விட்டு, ஓய்வெடுக்கும் அறையில் நல்லா ஜாலியா ரெஸ்ட் எடுத்தீங்களா என கேட்டு நக்கல் அடித்தது வேற லெவல்.

ஹேப்பி தான்
ஒரு வகையில் பார்த்தால், பாலா கூட ஜெயிலில் இருந்தது சுச்சிக்கு ரொம்பவே ஹேப்பியாகத்தான் இருந்திருக்கும். பாவம் உடல்நிலை சரியில்லாதவராக தெரிகிறார். சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டால், நன்றாக இருக்கும் என வந்த வேகத்தில் சுச்சியை வீட்டுக்கு அனுப்பும் ஏற்பாடுகளும் நடந்து விட்டன.

எதையும் லீக் பண்ணல
சுசித்ரா பிக் பாஸ் வீட்டுக்கு வராங்க, ஏகப்பட்ட சுச்சி லீக்ஸ் வெளியாகும், அவங்க ஹோட்டல் இருக்கும் போது யாரோ கொல்லப் பார்த்தாங்க என ஏகப்பட்ட பில்டப் கொடுத்துவிட்டு, இப்படி பீஸ் போன பல்பாக மாற்றி அவரை அவ்வளவு சீக்கிரம் வெளியேற்ற முடிவு செய்தது ஏகப்பட்ட பாலா ஹேட்டர்களுக்கு கடுப்பாகவே இருக்கிறது. அட்லீஸ்ட், சொந்த கதை சோகக் கதையை சொல்லக் கூட சுச்சிக்கு சான்ஸ் கொடுக்கவில்லையே என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணுகின்றனர்.


Click it and Unblock the Notifications











