Don't Miss!
- News
"பாஜகவின் நிலைப்பாடே எங்கள் நிலைப்பாடு.." ஜான் பாண்டியன் திடீர் பல்டி.. எடப்பாடிக்கு பெரிய ஷாக்
- Lifestyle
குளிர்காலத்துல இந்த ஆரோக்கியமான பானங்களை குடிப்பது... உங்க உடலுக்கு பல அதிசயங்கள செய்யுமாம்!
- Finance
லட்டு மாதிரி வந்த 400 கோடி.. அமேசானின் புதிய புரட்சி.. இனி டெலிவரி விமானத்தில்..!
- Sports
"யார்பா அது முரட்டு ஆளா ஓடுற" ரோகித்தை முட்டி தள்ளிய பாதுகாவலர்.. 2வது ODIல் சுவாரஸ்ய நிகழ்வு!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Technology
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
மூக்கறுத்து ஊறுகாய் போட்ருவேன்னு சொன்னா.. தாமரையை தரமாக கலாய்த்த கமல்.. பிரியங்கா ஹேப்பி!
சென்னை: தாமரை செல்வி பிக் பாஸ் வீட்டில் பிரியங்க உள்ளிட்டோர் பேசுவதை ஏன் பர்சனலாக எடுத்துக் கொள்கிறார் என்பதை விளக்க கமல் ஊறுகாய் கதையை சொல்லும் இரண்டாவது புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
தாமரை செல்வியை நாடகக்காரி என பிரியங்கா சொன்னால் அதற்கு ஏன் சண்டைக்கு போகணும் பேசியே பிரியங்காவுக்கு பதிலடி கொடுக்கலாமே என கமல் தாமரைக்கு புரிய வைக்க எடுத்த முயற்சிகள் இந்த புரமோவில் தெரிகிறது.
அப்பாடா இந்த விஷயத்தில் நம் பக்கம் பெருசா சாட்டையை சுழற்றாமல் தாமரை பக்கம் கமல் திரும்பிட்டாரே என பிரியங்கா ஹேப்பியா இருக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
நடிகர்
சிம்புவுக்கு
என்ன
ஆச்சு?
திடீர்
காய்ச்சலால்
தனியார்
மருத்துவமனையில்
அனுமதி

கமல் பஞ்சாயத்து
முதல் புரமோவில் பாவனி பிரச்சனை, இரண்டாவது புரமோவி தாமரை பிரியங்கா பிரச்சனையை எடுத்து கமல் பேசுவதை பார்த்தால் ரொம்பவே பாவமாக இருக்கிறது. வெள்ளிக்கிழமை எபிசோடிலே அவங்களே அந்த பிரச்சனைகளை சரி செய்து சமாதானம் ஆகிட்ட பிறகு மீண்டும் பிரச்சனை பற்றி பேசி இவர் வேற பிக் பாஸ் கேம் ஆடுறாரே என கலாய்த்து வருகின்றனர்.

தாமரை பிரியங்கா சண்டை
தாமரை செல்விக்கும் பிரியங்காவுக்கும் இடையே இந்த வாரம் நிகழ்ந்த மோசமான சண்டை பற்றி தனது கருத்தை வீக்கெண்ட் எபிசோடில் கமல் எடுத்து வைத்து பேசிய காட்சிகள் இன்றைய இரண்டாவது புரமோவில் வெளியாகி உள்ளன. கமல் டார்கெட் பிரியங்கா பக்கம் இல்லாமல் தாமரை பக்கம் தான் மேலோங்கி காணப்படுகிறது.

மூக்கறுத்து ஊறுகாய் போட்ருவேன்
பிரியங்கா பேசும் பேச்சுக்களை தாமரை பர்சனலாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக கமல் ஊறுகாய் கதையை எடுத்துக் கூறியுள்ளார். மூக்கறுத்து ஊறுகாய் போட்ருவேன் என ஒருவர் கோபத்தோடு சொன்னால் என்னது மூக்கை அறுத்து ஊறுகாய் போடுவியா.. அப்புறம் எப்படி நான் மூச்சு விடுறது.. அந்த ஊறுகாய் நல்லாவா இருக்கும்ன்னு யோசிக்கக் கூடாது என மசாலா கலந்து பேசியுள்ளார்.

நாடகக்காரி
"தெரியல தெரியல சொல்றீங்க.. நாடகம் நல்லா போடுறீங்க" என தாமரைக்கு எதிராக பிரியங்கா போட்ட கோஷத்தால் தாமரை தனது தொழிலையே அவர் தப்பாக பேசி விட்டார் என நினைத்துக் கொண்டார். அதற்கு விளக்கம் கொடுக்க நினைத்த கமல் குட்மார்னிங் டாக்டர்னு சொன்னதும் யாரை பார்த்து டாக்டருன்னு சொன்ன என எந்த டாக்டரும் கேட்க மாட்டாங்க என ஸ்க்ரிப்டில் எழுதி கொடுத்ததை படிப்பதை போல வசனம் பேசிக் கொண்டு இருக்கிறாரே என நெட்டிசன்கள் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

சொல்ற விதம்
நாடகக்காரின்னு சொல்வதில் எந்த தப்பும் இல்லை. நீங்கள் அதை தப்பாக நினைக்க வேண்டாம் என கமல் சொல்ல, சொல்ற விதம்னு ஒண்ணு இருக்குல சார் என கமலுக்கே கிடுக்கிப்பிடி போட்டு கேள்வி கேட்க, மறுபடியும் உனக்கு நாடகம் போட வருமான்னு பிரியங்காவா நீங்க கேளுங்க என பேசி முடித்த புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரியங்கா ஹேப்பி
இந்த வாரம் பிரியங்கா பண்ண பிரச்சனைகளுக்கு அவருக்கு டோஸ் விழும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அல்வா கொடுப்பது போல பிரியங்கா சைடு கமல் பேசியதை பார்த்ததும் பிரியங்காவின் முகத்தில் அவ்வளவு சிரிப்பு தெரிகிறது. இந்த வாரமும் பிரியங்காவை கமல் தட்டி கேட்காமல் தட்டிக் கொடுப்பார் என்றே தெரிவதாக நெட்டிசன்கள் கடுப்பாகி உள்ளனர்.