twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோவை உணவகத்தில் பெண்கள் மீது தாக்குதல் விவகாரம்… கமல்ஹாசன் பாய்ச்சல் !

    |

    சென்னை : கோவையில் உணவகத்திற்குள் புகுந்த காவலர் பெண்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதில் அங்கு உணவருந்திக் கொண்டு இருந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.

    பாண்டிச்சேரி பீச்சில்.. ஹாயாக காற்று வாங்கும் ஷாலு ஷம்மு.. வாட்டர்மிலன் என வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்! பாண்டிச்சேரி பீச்சில்.. ஹாயாக காற்று வாங்கும் ஷாலு ஷம்மு.. வாட்டர்மிலன் என வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!

    இந்த தாக்குதல் காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது இதுகுறித்து ஹோட்டலின் உரிமையாளர் மோகன்ராஜ் காவல்துறை ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார்.

    வேகமாக பரவுகிறது

    வேகமாக பரவுகிறது

    இந்தியாவில் கோவிட் வைரஸின் 2வது அலை உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று ஒரேநாளில் மட்டும், 6,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஹோட்டல்களுக்கு 11 மணி வரை

    ஹோட்டல்களுக்கு 11 மணி வரை

    மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு புதிய கட்டுப்பாடு அமல்படுத்தி உள்ளன. அதன்படி முன்னதாக உணவகங்கள் 9 வரை செயல்படாம் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட 11 மணி வரை நேரம் நீட்டிப்பு செய்துள்ளது.

    4 பேர் பலத்த காயம்

    4 பேர் பலத்த காயம்

    இதனிடையே கோவை காந்திபுரத்தில் நேற்று இரவு 10.30 மணி அளவில் உணவகத்திற்கு வந்த காட்டூர் உதவி ஆய்வாளர் முத்து, உணவகத்திற்குள் நுழைந்து உணவகத்தை மூட சொல்லி உள்ளார். மேலும் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்களை லத்தியால் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் 4 பேர்படுகாயம் அடைந்தனர். அது அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது இதுகுறித்து ஹோட்டலின் உரிமையாளர் மோகன்ராஜ் காவல்துறை ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார்.

    கமல்ஹாசன் ட்விட்டர்

    இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், இரவு 11 மணியைத் தாண்டி உணவகங்கள் செயல்படக்கூடாது என்பதே அரசின் ஆணை கோவை காந்திரபுரத்தில், பத்தரை மணிக்கு முன்னதாகவே போலீசார் ஓர் உணவகத்துக்குள் புகுந்து அங்கிருந்தோரைத் தாக்குகிறது.சாத்தான்குளப் படுகொலைகளை நினைவுபடுத்துகிறார்களா? பதிலளிக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை என்று பதிலளித்துள்ளார்

    English summary
    Kamal Haasan tweet about coimbatore hotel attack
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X