அடுத்த ஆண்டு இதனை இரட்டிப்பாக்குவோம்… தேசியவிருது பெற்றவர்களை வாழ்த்தி கமல் ட்விட்!
சென்னை : 67வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், தமிழ் திரைப்படங்களுக்கு மட்டும் 7 விருதுகள் கிடைத்துள்ளன.
அசுரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த இயக்குனர் விருது வெற்றிமாறனுக்கும் கிடைத்துள்ளது.
தேசிய விருது பெற்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

2 தேசிய விருது
2019ம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் தனுஷ் இருவேடங்களில் நடித்திருப்பார். மேலும், கருணாஸ் மகன் கென் கருணாஷ் தனுஷின் மகனாக நடித்து அவர் பங்குக்கு கதையை மேலும் சுவாரஸ்யமாக்கி இருப்பார். கதையில் எந்த இடத்திலும் தோய்வு இல்லாமல் அழகாக படமாக்கி இருப்பார் வெற்றி மாறன். இப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது தனுஷூக்கும், சிறந்த இயக்குனருக்கான விருது வெற்றி மாறனுக்கும் கிடைத்துள்ளது.

டி இமான் சிறந்த இசையமைப்பாளர்
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் மற்றும் நயன்தாரா நடித்த திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தில் அப்பா மகள் பாச போராட்டம் பார்வையாளர்களை கண்கலங்க வைத்து சென்டிமென்ட் காட்சிகள் ஏராளமாக இடம் பெற்று இருந்தன. டி இமானின் இசையில் தாமரை வரிகளில் சித் ஸ்ரீராமின் மாயக்குரலில் அனைவரின் மனதை கொள்ளை கொண்ட கண்ணான கண்ணே பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது டி இமானுக்கு கிடைத்துள்ளது.

2 விருது
இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் மட்டுமே நடித்து அவரே இயக்கி தயாரித்த ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதும். சிறந்த ஒலிப்பதிவுக்கான விருது ரசூல் பூக்குட்டிக்கும் கிடைத்துள்ளது. சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.
இரட்டிப்பாக்குவோம்
இந்நிலையில் தமிழக திரைப்படங்களுக்கு மொத்தம் 7 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. தேசிய விருது பெற்றவர்களுக்கு கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், 7 தேசிய விருதுகள் தமிழ்த் திரைப்படங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சாதனையாளர்களுக்கும், அவர்தம் அணியினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டு இதனை இரட்டிப்பாக்குவோம் வெல்க தமிழ் சினிமா என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











