Project K: அமெரிக்காவில் ராஜநடை போடும் கமல்ஹாசன்... ப்ராஜெக்ட் கே முதல் சம்பவமே இதுதானா..?
வாஷிங்டன்: பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்தப் படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகியோரும் லீடிங் ரோலில் நடித்து வருகின்றனர்.
மிக பிரம்மாண்டமாக உருவாகும் ப்ராஜெக்ட் கே படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் ஜூலை 21ம் தேதி வெளியாகிறது.
ப்ராஜெக்ட் கே க்ளிம்ப்ஸ் வெளியீட்டு விழாவுக்காக அமெரிக்கா சென்றுள்ள கமலின் போட்டோ வைரலாகி வருகிறது.

முதல் ஆளாக அமெரிக்கா சென்ற கமல்ஹாசன்: பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்திய சினிமாவில் புதிய முயற்சியாக உருவாகி வரும் ப்ராஜெக்ட் கே படத்தில் கமல், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் என செம்ம மாஸ் ஹீரோக்களும் இணைந்துள்ளனர். இதனால், ப்ராஜெக்ட் கே படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் பிரபாஸுக்கு வில்லனாக கமல் நடித்து வருவதாகவும், க்ளைமேக்ஸில் மட்டுமே அவர் வருவார் எனவும் கூறப்படுகிறது. ப்ராஜெக்ட் கே முதல் பாகத்தில் கமலின் போர்ஷன் கொஞ்சமே இருக்கும் என்பதால், இரண்டாம் பாகத்தில் அவரது கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ப்ராஜெக்ட் கே படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ அமெரிக்காவில் இருந்து வெளியிடப்படவுள்ளது. ஜூலை 20ம் தேதி அமெரிக்காவிலும், ஜூலை 21ம் தேதி இந்தியாவிலும் வெளியாகவுள்ளது. அமெரிக்காவில் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில், ப்ராஜெக்ட் கே படக்குழுவினரும் பங்கேற்க உள்ளனர்.

இதற்காக உலக நாயகன் கமல்ஹாசன் முதல் ஆளாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்குள்ள சாலைகளில் செம்ம ஸ்டைலிஷாக ராஜநடை போடும் கமல்ஹாசனின் போட்டோ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த போட்டோவில் சிம்பிள் & ஸ்டைலிஷாக ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளார் உலக நாயகன். கமல் தவிர பிரபாஸ், தீபிகா படுகோன், இயக்குநர் நாக் அஸ்வின் உள்ளிட்டோரும் ப்ராஜெக்ட் கே க்ளிம்ப்ஸ் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.
இதனிடையே இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் ராணாவும் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பாகுபலி படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக மிரட்டிய ராணா, இப்போது ப்ராஜெக்ட் கே-இல் நடிக்கவுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜூலை 21ம் தேதி வெளியாகும் ப்ராஜெக்ட் கே க்ளிம்ப்ஸ், இந்தப் படம் குறித்த தரமான அப்டேட்டை ரசிகர்களுக்கு கொடுக்கவுள்ளதாம்.
வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் 50வது ஆண்டு கொண்டாட்டமாக ப்ராஜெக்ட் கே உருவாகி வருகிறது. 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக ப்ராஜெக்ட் கே படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











