கமல்ஹாசனின் மாமா மறைவு.. கண்கலங்கி இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன்
சென்னை: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் மாமா வாசு என்பவர் நேற்று உயிரிழந்த நிலையில், அவரது உடல் மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கமல்ஹாசனின் மகள்களான ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இருவரும் தாத்தா வாசுவின் உடலை பார்த்து கண்கலங்கிய காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
முன்னதாக தனது மாமா வாசுவின் மரணம் குறித்து பதிவிட்ட கமல்ஹாசன் அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதாக தெரிவித்து ட்வீட் ஒன்றையும் பதிவிட்டு இருந்தார். மேலும், தனது மாமா வாசு பற்றியும் அவரது சிறப்புகள் குறித்தும் கமல்ஹாசன் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

தாத்தாவின் மறைவால் வாடிப்போன கமல்ஹாசனின் இரு மகள்களும் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட காட்சிகள் வெளியாகி உள்ளன. பல நாட்களாக மீடியா வெளிச்சம் இல்லாமல் இருந்த அக்ஷரா ஹாசனை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் செய்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
கமல்ஹாசனின் மாமா காலமானார்: கமல்ஹாசனின் மாமா வாசு தனது 92வது வயதில் காலமானார். கொடைக்கானலில் வசித்து வந்த அவர் அங்கே உயிரிழந்த நிலையில், அவரது உடல் அஞ்சலிக்காக மக்கள் நீதி மய்யத்தில் வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. கமல்ஹாசனின் மாமா வாசுவின் இறுதிச்சடங்கில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களும், சில சினிமா பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர்.
கமல்ஹாசன் இரங்கல்: "எனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த ஆருயிர் மாமா சீனிவாசன் இன்று தன்னுடைய 92-வது வயதில் கொடைக்கானலில் காலமானார். புரட்சிகரமான சிந்தனைகளுக்காகவும், துணிச்சலான செயல்களுக்காகவும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு வீரயுக நாயகனாக திகழ்ந்தவர் வாசு மாமா.
இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவரது உடல் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு இன்றிரவு கொண்டு வரப்படும். நாளை (23-04-24) காலை 10:30 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்." என கமல்ஹாசன் நேற்று ட்விட்டரில் பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்தார்.

கலங்கிய கமல்ஹாசன் மகள்கள்: தாத்தா வாசு காலமான நிலையில், அவரது உடல் மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இருவரும் அந்த இடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். அனைத்து வேலைகளையும் அக்ஷரா ஹாசன் கவனித்து வந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
பல நாட்கள் கழித்து அக்ஷரா ஹாசன்: ஸ்ருதிஹாசன் சலார் படத்தில் நடித்து பிசியான நிலையில், லோகேஷ் கனகராஜுடன் இணைந்து இனிமேல் வீடியோ பாடலிலும் நடித்திருந்தார். அடுத்ததாக கூலி படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அக்ஷரா ஹாசன் கடைசியாக 2022ம் ஆண்டு வெளியான "அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு" படத்தில் நடித்த அக்ஷரா ஹாசன் அதன் பின்னர் லைம் லைட்டில் இல்லாத நிலையில், தற்போது தனது தாத்தாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளார். அருண் விஜய், விஜய் ஆண்டனியுடன் இணைந்து அவர் நடித்த அக்னி சிறகுகள் படம் பல ஆண்டுகளாக ரிலீஸ் செய்யாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











