பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் - வெளியிடுவது யார் தெரியுமா?.. அறிவித்தது லைகா

சென்னை: மார்ச் 29ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் விழாவில் கமல் ஹாசன் கலந்துகொள்வார் என லைகா நிறுவனம் அறிவித்திருக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் காலங்கடந்து பேசப்படும் நாவல் பொன்னியின் செல்வன். எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த நாவல் பிரபல பத்திரிகையில் தொடராக வந்தது. தொடராக வந்து வரவேற்பை பெற்றதை அடுத்து புத்தகமாக வெளியிடப்பட்டது.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்

மொத்தம் ஐந்து பாகங்களை உடைய பொன்னியின் செல்வன் நாவல் எப்போது திரைப்படமாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியானதிலிருந்தே பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக எப்படி இருக்கும் என்ற ஆவல் உருவானது.

பெரும் வரவேற்பைப் பெற்ற பொன்னியின் செல்வன் 1

பெரும் வரவேற்பைப் பெற்ற பொன்னியின் செல்வன் 1

கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிப்பில் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டது. அதில் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது அமோக ஆதரவை தந்தனர். இதனால் படம் 500 கோடி ரூபாய்வரை வசூலித்தது.

பெரும் எதிர்பார்ப்பில் பொன்னியின் செல்வன் 2

பெரும் எதிர்பார்ப்பில் பொன்னியின் செல்வன் 2

முதல் பாகம் பெற்ற பிரமாண்ட வெற்றியை அடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் மீதும் ரசிகர்கள் தங்களது கவனத்தை குவித்துள்ளனர். இதனால் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றன படக்குழுவும், தயாரிப்பு நிறுவனமும். அதுமட்டுமின்றி முதல் பாகத்தில் இருந்த சிறு சிறு குறைகள் நிச்சயம் இதில் களையப்படும் எனவும் கருதப்படுகிறது.

ஏப்ரலில் ரிலீஸாகும் பொன்னியின் செல்வன் 2

ஏப்ரலில் ரிலீஸாகும் பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் 2 ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. தமிழ்நாட்டில் இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் இன்று வெளியிட்டது. இதற்கிடையே படத்தின் ரன்னிங் டைம் மொத்தம் நான்கு மணி நேரம் என தகவல் வெளியாகியுள்ளது. இது கொஞ்சம் அதிகம் என்ற பேச்சு எழுந்தாலும், ஐந்து பாகங்களை கொண்ட பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றால் இந்த ரன்னிங் டைம்தான் அவசியம் எனவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

ட்ரெய்லர் மற்றும் ஆடியோ ரிலீஸ்

ட்ரெய்லர் மற்றும் ஆடியோ ரிலீஸ்

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் விழா மார்ச் 29ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் படக்குழுவினர் தவிர சிறப்பு விருந்தினராக யார் கலந்துகொள்வார் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் கமல் ஹாசன் பொன்னியின் செல்வன் 2 ஆடியோ மற்றும் ட்ரெய்லர வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பொன்னியின் செல்வன் 1 இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினியும், கமலும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X