STR 48: ஹீரோவும் நானே.. வில்லனும் நானே.. தாறுமாறு பண்ணும் சிம்பு.. சரியான பர்த்டே ட்ரீட்!

சென்னை: நடிகர் சிம்பு பிப்ரவரி 3ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அவரது நடிப்பில் உருவாக் வரும் எஸ்டிஆர் 48 படத்தின் வெறித்தனமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு கமல்ஹாசன் சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பாகுபலி படத்திற்கு இந்திய சினிமாவே வரலாறு தொடர்பாகவும் போர் வீரர்களை மையப்படுத்திய பிரம்மாண்ட படங்கள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. எத்தனை கோடி பட்ஜெட்டில் உருவானாலும் அந்த படங்களை பார்க்க ரசிகர்கள் தியேட்டரை நோக்கி வருகின்றனர் என்பதால் பலரும் அந்த ஜானர் படங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Kamal Haasan unveils STR 48 first look on behalf of Silambarasan TR birthday

கங்குவா: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா தமிழ் சினிமாவுக்கு ஒரு பாகுபலி ரேஞ்சுக்கு ஒரு படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு வெறித்தனமான போர் வீரன் லுக்கில் சூர்யா நடித்துள்ள நிலையில், அடுத்து சிம்புவும் அதே போன்றதொரு பிரம்மாண்டமான படத்தில் நடிக்க முன் வந்திருக்கிறார்.

கமல் தயாரிப்பில்: சிவகார்த்திகேயனை வைத்து எஸ்கே 21 படத்தை தயாரித்து முடித்துள்ள கமல்ஹாசன் 100 கோடி பட்ஜெட்டில் அடுத்து சிம்புவை வைத்து எஸ்டிஆர் 48 படத்தை தயாரித்து வருகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் படத்தை துல்கர் சல்மான், ரிது வர்மா, கெளதம் மேனனை வைத்து இயக்கி இயக்குநராக அறிமுகமான தேசிங் பெரியசாமி பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்கவுள்ள படம் தான் எஸ்டிஆர் 48.

டபுள் ஆக்‌ஷனில் சிம்பு: நடிகர் சிம்பு நெகட்டிவ் ரோலில் நடித்தால் படம் பட்டையை கிளப்பும் எஸ்டிஆர் 48 படத்தில் யார் வில்லன் என்கிற கேள்வி எழுந்து வந்த நிலையில், சிம்பு தான் வில்லனாக இருப்பார் என யூகித்து இருந்தோம். தற்போது சிம்பு இரட்டை வேடங்களில் எதிரும் புதிருமாக இருக்கும் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

பர்த்டே ட்ரீட்: இயக்குநர் டி. ராஜேந்தரின் மகனான சிம்பு சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். தனது 41வது பிறந்தநாளை நாளை கொண்டாட உள்ள நிலையில், அவரது ரசிகர்களுக்கு எஸ்டிஆர் 48 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. ஆனால், படத்தின் டைட்டிலை அறிவிக்காமல் சற்றே ஏமாற்றி விட்டனர். விரைவில் படப்பிடிப்பு நிறைவடையும் வேளையில் படத்தின் தலைப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X