பிந்து மாதவியுடன் கமல் போஸ்.. பேன்ட் ஜிப் போட மறந்தது சரியா? கிளம்பிய பிரதீப் ரசிகாஸ்
சென்னை: பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான பிந்து மாதவி கமல் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட்டு கமல் மானத்தை காற்றில் பறக்க விட்டுள்ளார்.
பாத்ரூம் டோர் சாத்தவில்லை என பிரதீப்பை கமல் வெளியேற்றினாரே தற்போது பேன்ட் ஜிப்பே போடாமல் நடிகையுடன் இப்படி போஸ் கொடுத்து நிற்கிறாரே உலக நாயகன் இது சரியா என பிரதீப் ரசிகாஸ் கேள்வி எழுப்பி கலாய்த்து உள்ளனர். கமல்ஹாசனுக்கு எதிராக தொடர்ந்து ஏகப்பட்ட பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் கமலின் மன்மத லீலைகளை எல்லாம் எடுத்து வெளியிட்டு வரும் நிலையில், பிந்து மாதவி மேலும், ஒரு செம கன்டென்ட் கொடுத்துள்ளார்.

பிரதீப் வெளியேற்றம்: பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பில்லாத போட்டியாளர் என்றும் மோசமாக பெண்களுடன் நடந்துக் கொள்கிறார் பிரதீப் ஆண்டனி என அவர் தரப்பு வாதத்தைக் கூட கேட்காமல் கமல்ஹாசன் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விட்டார். தனது நிலைப்பாட்டுக்கு விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை என்றால் தானே வெளியேறி இருப்பேன் என்றும் உருட்ட ஆரம்பித்தார்.
மாத்தி மாத்தி பேசும் பெண்கள்: பிரதீப் ஆண்டனியை மோசமான குற்றச்சாட்டுகளை சொல்லி வெளியே அனுப்பிய நிலையில், தற்போது தன்னிடம் பிரதீப் தவறாக நடந்துக் கொள்ளவில்லை என்றும் நாங்க சும்மா கை தூக்கினோம் கமல் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புவாருன்னு எதிர்பார்க்கல என உள்ளே இருந்துக் கொண்டு உலக நாயகனையே மிஞ்சும் அளவுக்கு நடித்து வருகின்றனர்.
ஜிப் போடல?: ஏற்கனவே பிரதீப் விஷயத்தில் கமல்ஹாசனை பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கண்டபடி கழுவி ஊற்றி வருகின்றனர். இந்நிலையில், எரிகிற கொள்ளியில் பெட்ரோல் எடுத்து ஊத்தியது போல முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான பிந்து மாதவி கமலுடன் எடுத்துக் கொண்ட த்ரோபேக் போட்டோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி உள்ளார். அதில், கமல்ஹாசன் பேன்ட் ஜிப் போட மறந்து விட்டதாக ரசிகர்கள் கமெண்ட் போட்டு அசிங்கப்படுத்தி வருகின்றனர்.
வயசான காலத்துல மறந்துருப்பாரு என்றும் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றதுக்கு பதில் நாம எப்படி என்பதை கமல் அறிந்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











