சூர்யா குறித்து கமல் சொன்ன சூப்பர் தகவல்.. அடுத்த படத்தில் சூர்யா நடிப்பது உறுதிதான் போல இருக்கே!

திருவனந்தபுரம் : நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ளது விக்ரம் படம்.

Recommended Video

Surya, Vijay Sethupathi லாம் என் மாணவர்கள் இல்ல ! | Kamal Haasan | Lokesh Kangaraj | #Kollywood

படத்தில் சூர்யா முக்கியமான கேமியோ ரோலில் நடித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் கேரளாவில் படத்தின் பிரமோஷனில் நடிகர் கமல்ஹாசன் ஈடுபட்டுள்ளார்.

விக்ரம் படம்

விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது விக்ரம் படம். இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் டீசர், ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

சிறப்பான பிரமோஷன்

சிறப்பான பிரமோஷன்

இந்தப் படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் சிறப்பாக ஈடுபட்டுள்ளனர். படத்தின் ட்ரெயிலர், டீசர், போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தில் ஒவ்வொரு நடிகர்களின் எனர்ஜி குறிப்பாக கமலின் எனர்ஜி சிறப்பாக காணப்படுகிறது.

5 மொழிகளில் ரிலீஸ்

5 மொழிகளில் ரிலீஸ்

படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இதையடுத்து டெல்லியில் படத்தின் பிரமோஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது கேரளாவிலும் பிரமோஷன் பணிகளில் கமல் ஈடுபட்டுள்ளார். முன்னதாக சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

பத்திரிகையாளர் சந்திப்பு

பத்திரிகையாளர் சந்திப்பு

இந்த நிகழ்ச்சியில் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களிடம் பேசினர். முன்னதாக சென்னையில் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்றது.

பிரமோஷனில் கமல்ஹாசன்

பிரமோஷனில் கமல்ஹாசன்

இதனிடையே தற்போது கேரளாவில் படத்தின் பிரமோஷனுக்காக கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். அதில் சூர்யாவின் கேரக்டரை ரசிகர்களுக்கு சர்ப்பிரைசாக கொடுக்க நினைத்ததாகவும் ஆனால் அந்த தகவல் கசிந்ததால் அதை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

சூர்யா குறித்து கமல்

சூர்யா குறித்து கமல்

தொடர்ந்து பேசிய அவர், விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் கேமியோதான் என்றும் ஆனால் நீண்ட உறவிற்கான ஆரம்பமாகவே இந்த கேரக்டரில் அவர் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் சூர்யா, அடுத்ததாக கமலின் தயாரிப்பில் நடிக்கலாம் என்றும் அது விக்ரம் 3ஆக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் 3 படம்

விக்ரம் 3 படம்

முன்னதாக ஒரு பேட்டியில் விக்ரம் 3 படம் தயாரிக்கப்படும் என்றும் அதை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது சூர்யா குறித்து இவ்வாறு பேசியுள்ளது சூர்யா ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல் படத்தை தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X