சினிமா, அரசியல், கொரோனா கூடவே மருதநாயகம்.. விஜய்சேதுபதி கேட்க, லைவ்வில் பதிலளித்த கமல்ஹாசன்!
சென்னை: தலைவன் இருக்கிறான் டைட்டிலில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் பல விஷயங்களை விஜய்சேதுபதி பேசியுள்ளார்.
Recommended Video
எம்.ஜி.ஆர் குறித்தும், சிவாஜி குறித்தும் பல சுவாரஸ்ய விஷயங்களை நடிகர் கமல்ஹாசன் விஜய்சேதுபதி கேள்வி கேட்க கேட்க நேரலையில் மனம் திறந்து பேசினார்.

மேலும், தான் நடித்த பல படங்கள் குறித்த விஷயங்களை வெளிப்படையாக கமல் பேசியதை பல ஆயிரக் கணக்கான ரசிகர்கள் பார்த்தனர்.
தலைவன் இருக்கிறான் படத்தை பற்றிய விசயங்கள் பேசப்படும் என நினைத்த ரசிகர்களுக்கு, கமல்ஹாசனை முழுவதுமாக அறிந்து கொள்ளும் நேரலையாக இருந்தது.
விமானம் ஏற சிவாஜி கணேசன் பயந்தது குறித்து பேசிய கமல்ஹாசன், தங்கச்சுரங்கம் படத்தில் எம்.ஜி.ஆர் ஸ்டைலில் நடித்தது குறித்து விமர்சனம் செய்தது என்ற அரிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
இறுதியாக மக்கள் நீதி மய்யத்திற்கு ஏன் அந்த பெயரை வைத்தீர்கள் என்ற விஜய்சேதுபதியின் கேள்விக்கு மய்யம் தனக்கு மிகவும் பிடித்த சொல் என்றும், கம்யூனிசம் போன்ற ஒரு நடு நிலையான சொல்லை தன் கட்சிக்கு வைக்க வேண்டும் என சிந்தித்தே அந்த பெயரை வைத்ததாக கூறியுள்ளார்.
சினிமாவில் நேர்மையாக இருந்த நடிகர் கமல்ஹாசன், அரசியலில் வருவது வரவேற்கத்தக்கது என நடிகர் விஜய்சேதுபதி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
மருதநாயகம் படம் குறித்து கடைசியாக அபிஷேக் கேட்ட கேள்விக்கு, நிறைய பணம் இருந்தால், அந்த படம் உருவாகும் என்றும், அப்படியே உருவானாலும், மருதநாயகத்திற்கு வயது 40, தன்னால் நடிக்க முடியாது, வேறு ஒரு நடிகர் தான் நடிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், கொரோனா குறித்த விழிப்புணர்வு மற்றும் அரசியல் தலைவர்கள் இந்த காலக்கட்டத்தில் மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள் குறித்தும் விவரமாக கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட லைவ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் யூடியூபர் அபிஷேக் ராஜாவின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.


Click it and Unblock the Notifications











