பாலிவுட்டை சாம்ராட் பிருத்விராஜ்னால கூட காப்பாற்ற முடியலையே.. இந்தியளவில் விக்ரம் தான் வசூலில் டாப்!
மும்பை: RRR மற்றும் கேஜிஎஃப் 2 படங்கள் இந்தி பெல்ட்டிலேயே முதல் நாளில் 50 கோடி வசூலை அள்ளிய நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட அக்ஷய் குமாரின் சாம்ராட் பிருத்விராஜ் முதல் நாள் வசூல் கமலின் விக்ரம் படத்தைக் கூட முந்த முடியாமல் திணறி உள்ளது.
Recommended Video
நாங்களும் பான் இந்தியா படம் வெளியிடுறோம் என டப்பிங் வெர்ஷனை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெளியிட்ட நிலையில், பல இடங்களில் தியேட்டர்கள் காலியாக காத்து வாங்கி வருகிறது.
விமர்சன ரீதியாகவும் அடிவாங்கி உள்ள அக்ஷய் குமாரின் சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படம் முதல் நாளில் இந்தியளவில் எவ்வளவு வசூல் அள்ளியுள்ளது என்பதை இங்கே பார்ப்போம்.

பரிதாப நிலையில் பாலிவுட்
தென்னிந்திய படங்களை எல்லாம் இந்திய படங்களே இல்லை இந்தி படங்கள் மட்டுமே இந்திய படங்கள் என பல ஆண்டுகளாக இருட்டடிப்பு செய்து வந்த பாலிவுட் திரையுலகம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் பரிதாப நிலையில் உள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான், அஜய் தேவ்கன் மற்றும் அக்ஷய் குமாரின் படங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே படு தோல்வியை சந்தித்தது தான் இந்த நிலைமைக்கு காரணம்.

பெயர் மாற்றம்
பிருத்விராஜ் என்கிற டைட்டிலுடன் இந்த படம் உருவாக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு வந்த நிலையில், கடைசியாக சாம்ராட் பிருத்விராஜ் என மரியாதை கொடுத்து டைட்டிலை மாற்றியதன் பிறகு தான் படம் வெளியாகவே அனுமதி கிடைத்தது. ஆனால், வெளியான பிறகு விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களையே அந்த படம் பெற்றுள்ளது.

முதல் நாள் வசூல்
அக்ஷய் குமாரின் ராஜாங்க படமான சாம்ராட் பிருத்விராஜ் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் இந்தியா முழுவதுமே முதல் நாளில் வெறும் 10 முதல் 11 கோடி வரை வசூல் செய்யவே கடும் சிரமத்துக்குள் ஆளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விக்ரம் தான் டாப்
கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்ப் படமான விக்ரம், தெலுங்கு படமான மேஜர் மற்றும் இந்தி படமான சாம்ராட் பிருத்விராஜ் என மூன்று பெரிய படங்கள் மோதின. இதில், இந்தியளவில் 34 கோடி வரை வசூல் செய்து கமல்ஹாசனின் விக்ரம் படம் முதலிடத்தில் உள்ளதாக கூறுகின்றனர். விக்ரம் ஹிட்லிஸ்ட் இந்தி வெர்ஷனுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த வார இறுதியில் மிகப்பெரிய வசூல் வேட்டையை விக்ரம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமீர்கான் படம் என்னவாகும்
அமீர்கான், அமிதாப் பச்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான தக்ஸ் ஆஃப் இந்தோஸ்த்தான் படம் கடைசியாக வெளியாகி படுதோல்வியை சந்தித்த நிலையில், லால் சிங் சத்தா படம் என்ன ஆகும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெளியான அந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள், அப்படியே பிகே படத்தில் பார்த்த அமீர்கான் மாதிரியே இருக்காரே, என தங்களின் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ஷாருக்கானின் அடுத்த 3 படங்களும் அடுத்த ஆண்டு வெளியாக உள்ள நிலையில், பாலிவுட் இப்போதைக்கு மீள்வது சிரமம் தான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











