“பத்தல பத்தல“ பாடல் புதிய சாதனை… பின்னே… ஆண்டவர்னா சும்மாவா?

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் குரலில் 'பத்தல பத்தல' பாடல் வெளியான 3 நாளில் புதிய சாதனையை படைத்துள்ளது.

விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடியாக கன்னடத்தில் இளம் நடிகையாக வலம் வரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடித்துள்ளார். அதோடு முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் நரேன் காளிதாஸ், ஜெயராம், பிக்பாஸ் ஷிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி, மற்றும் மைனா நந்தினி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது.

விக்ரம்

விக்ரம்

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து புரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் சிங்கிள்

முதல் சிங்கிள்

அனிருத் இசையில் விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் பத்தல பத்தல பாடல் வெளியானது. அனிருத்தின் இசையில் "பத்தல பத்தல பாடலை" மெர்சலுடன் எழுதி பாடி உள்ளார் கமல்ஹாசன். காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே... ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே... என பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். இந்த வரிகள் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த பாடலுக்கு எதிராக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

Recommended Video

விடியலை யார் பார்க்கணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன்!... Surya இருக்காரா? | Filmibeat Tamil
சாதனை

சாதனை

இந்த பாடலுக்கு என்னத்தான் எதிர்ப்புகள் எழுந்தாலும், கமலின் தீவிர ரசிகர்கள் பாடலை கொண்டாடி ரிப்பீட் மோடில் கேட்டு வருகின்றன. பத்தல பத்தல பாடல் வெளியான மூன்று நாட்களில் 17 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து பாடல் பெற்ற சாதனையை இந்த பாடல் முறியடித்துள்ளது. இந்த தகவலைப்பார்த்த நெட்டிசன்ஸ் ஆண்டர்வர்னா சும்மாவா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

டிரைலர்

டிரைலர்

விக்ரம் படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. விக்ரம் படத்தின் இசைவெளியிட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் விக்ரம் படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியானது. டிரைலரில் கமல், விஜய்சேதுபதி,பகத் பாசில் அசுரத்தனமாக நடித்துள்ளனர். ஜூன் 3ந் தேதி விக்ரம் திரைப்படம் வெளியாகி பட்டையை கிளப்ப உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X