பிறந்த நாளன்று மருத்துவ முகாம்களைப் பார்வையிடும் கமல்!
Recommended Video

சென்னை: தனது 63வது பிறந்த நாளை அர்த்தமுள்ளதாகவும், அரசியல் முக்கியத்துவம் கொண்டதாகவும் கொண்டாட நினைக்கும் கமல், அதன் தொடர்ச்சியாக மருத்துவ முகாம்களை அமைத்துள்ளார்.
ஆவடி மற்றும் பள்ளிக்கரணை பகுதிகளில் தனது நற்பணி இயக்கத்தின் மூலம் இரு மருத்துவ முகாம்களை அமைத்துள்ள கமல் ஹாஸன், இந்த இடங்களுக்கு தானே நேரில் போய் மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகளைப் பார்வையிடுகிறார்.

காலை 7 மணிக்கு ஆவடி அன்னப்பூர்ணா திருமண மகாலில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமைப் பார்வையிட்டார் கமல் ஹாஸன்.
பின்னர் அங்கிருந்து பள்ளிக்கரணைக்குக் கிளம்பினார். பள்ளிக்கரணையில் நாராயணபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிட 9 மணிக்கு கமல் வருகிறார்.
இந்த இரு விசிட்களையும் முடித்துக் கொண்டு, பிற்பகல் 12 மணிக்கு சென்னை ஜிஆர்டி ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் முக்கியத்துவம் கொண்டது என்றும், மாற்றத்துக்கான முதல் படி என்றும் கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











