புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய கமல்ஹாசன் !

பெங்களுர் : மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் குடும்பத்திரை நேரில் சந்தித்து நடிகர் கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் புனித், இவர் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார்.

அக்டோபர் 29ந் தேதி ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

புனித் ராஜ்குமார்

புனித் ராஜ்குமார்

புனித் ராஜ்குமார் சுயநினைவை , இழந்த நிலையில் இருந்த நிலையில், அருகில் இருந்த விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

பேரதிர்ச்சி

பேரதிர்ச்சி

புனித்தின் மரணச் செய்தி அனைவரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என லட்சக்கணக்கானோர் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். பல திரைப்பிரபலங்கள் சமூக வலைத்தள பக்கத்திலும் இரங்கல் தெரிவித்தனர்.

அரசு மரியாதையுடன்

அரசு மரியாதையுடன்

புனித் ராஜ்குமாரின் இறுதிஊர்வலம் அக்31ந் தேதி யஷ்வந்த்பூர் அருகிலுள்ள கண்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் அவரது தந்தை ராஜ்குமாரின் நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பல பிரபலங்கள்

பல பிரபலங்கள்

புனித் ராஜ்குமாரின் இறுதி நிகழ்ச்சியில் பல திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், விஜபிக்கள் கலந்து கொண்டனர். ஆனால், தமிழக நட்சத்திரங்கள் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதைடுத்து, தமிழக திரைப்பிரபலங்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு குடும்பத்தினருக்கு சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.

நேரில் ஆறுதல்

நேரில் ஆறுதல்

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் ‘விக்ரம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக பெங்களூரு சென்றுள்ள கமல், புனித் ராஜ்குமாரின் இல்லத்திற்கு சென்று, புனித் ராஜ்குமாரின் மனைவி மற்றும் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பின்போது நடிகர் ரமேஷ் அரவிந்தும் உடன் இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X