மீண்டும் தேதியை மாற்றினார் கமல்... 7-ம் தேதி விஸ்வரூபம் ஆடியோ!!
விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மீண்டும் மாற்றினார் கமல்ஹாஸன்.
இந்த முறை விழா வரும் டிசம்பர் 7-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மூன்று பெரிய நகரங்களில் இந்த விழா காலை, பிற்பகல், மாலை என நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஸ்வரூபம் ஆடியோவை சோனி நிறுவனம் வாங்கியதாக அறவித்து.
அதன் பிறகு, டிசம்பர் 2-ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் விஸ்வரூபம் இசை வெளியிடப்படும் என்றார்கள். ஆனால் அந்தத் தேதியும் மாறிவிட்டது.
இப்போது டிசம்பர் 7-ம் தேதி இசை வெளியாகும் என்று அறிவித்துள்ளார். மதுரையில் வேலம்மாள் மைதானத்தில் காலையிலும், கோவையில் இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் பிற்பகலிலும், சென்னையில் மாலையிலும் நடக்கப் போகிறதாம்.
சென்னையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்தைப் பற்றிய தகவலை மட்டும் இதுவரை தெரிவிக்கவில்லை கமல்.


Click it and Unblock the Notifications











