சின்ன வயசுலயே கெட்ட வார்த்தையில் கவிதை எழுதினேன்.. எங்க அப்பா வந்து என்ன சொன்னார் தெரியுமா? - கமல்!

சென்னை: நடிகர் சிம்பு பாடிய பீப் சாங் பாடல் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. அதற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால், சமீப காலமாக ஓடிடியிலும் திரைப்படங்களிலும் அதிகமாக ஆபாச வார்த்தைகள் இடம்பெறுகின்றன. கமல்ஹாசன், விஜய், அஜித் என அனைத்து டாப் ஹீரோக்களும் ஆபாச வசனங்களை பேசி நடிக்கின்றனர்.

இந்தியன் 2 படத்திலும் நிறைய ஆபாச வசனங்களும், சென்சார் செய்யும் அளவுக்கு மோசமான கிளாமர் காட்சிகளும் இருந்த நிலையில், கடைசி நேரத்தில் தணிக்கை குழு அதையெல்லாம் நீக்க உத்தரவிட்டுள்ளது.

indian 2 kamal haasan shankar 2

அது தொடர்பாக பேசிய கமல்ஹாசன், சிறு வயதிலேயே தான் கெட்ட வார்த்தையில் கவிதைகளை எழுதி அப்பாவிடம் மாட்டிக் கொண்ட கதையை கூறியுள்ளார்.

இந்தியன் 2 சென்சார்: 3 மணி நேரம் இந்தியன் 2 திரைப்படம் ஓடப் போகிறது. சமீபத்தில், அதன் சென்சார் நடைபெற்ற நிலையில், படத்தில் இடம்பெற்ற ஆபாச வசனங்கள் மற்றும் ஆபாச காட்சிகளை நீக்கச் சொன்னதாக ஷங்கர் கூறினார். சினிமாவில் தொடர்ந்து ஆபாச வசனங்கள் வருவதற்கான காரணத்தையும், எதிர்காலத்தில் சினிமாவில் அதை சென்சார் போர்டு அனுமதிக்க வேண்டும் என கமல் பேசியுள்ளார்.

சிறு வயதிலேயே ஆபாச கவிதை: நான் சின்ன பையனா இருக்கும் போது, நிறைய கெட்ட வார்த்தை கவிதை எழுதிட்டேன்னு ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு ஒரு கம்ப்ளைண்ட் வந்தது. எங்க அப்பாவை ஊர்ல இருந்து வர வச்சிட்டாங்க, என்னை வீட்டை விட்டே துரத்திடுவாங்கனு பயந்துட்டேன். எங்க அப்பா வந்து பார்த்துட்டு, முதல்ல சொன்ன வார்த்தை.. தமிழில் தலையும் சீரும் சரியில்லைன்னு சொன்னார். அதன் பின்னர் கெட்ட வார்த்தை விஷயத்துக்கு வந்தார். நீ ஒண்ணு பண்ணு டாக்டருக்கு படி.. நீ என்னன்ன கெட்ட வார்த்தைகள் எல்லாம் எழுதியிருக்கியோ அதெல்லாம் பாடமாக மாறிவிடும். உறுப்புகள் பெயர் எல்லாம் அதில், சொல்லியிருப்பாங்க அவ்ளோதான் கெட்ட வார்த்தை வேற என்ன கெட்ட வார்த்தை என கமல் பேசியுள்ளார்.

சென்சார் போர்டு அனுமதிக்கணும்: ஆண் மக்கள் தாங்கள் செய்ய முடியாத தொழிலை பெண்கள் செய்யும் அந்த பொறாமையில் பேசும் வார்த்தை தான் கெட்ட வார்த்தை. ஆண்கள் அதெல்லாம் செஞ்சிருந்தா இதெல்லாம் கெட்ட வார்த்தையாகவே மாறியிருக்காது என பேசிய கமல், சென்சார் போர்டு வரும் காலத்தில் இதுபோன்ற கெட்ட வார்த்தைகளை படங்களில் அனுமதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

படத்தில் வரலைன்னா இளைஞர்களுக்கு தெரியாதா?: மேலும், படங்களில் சென்சார் பண்ணிட்டா அந்த வார்த்தைகள் இளைஞர்களுக்குத் தெரியாதா என்றும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். எல்லாருமே பேசுற வார்த்தை தானே படங்களில் வருகிறது. அதை ஏன் தடை செய்ய வேண்டும் என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளார். கெட்டவனாக காட்டினால் நிஜத்தில் அவர் கெட்டவன் கிடையாது. அது ஒரு கெட்ட ஐடியாலஜி தான் அந்த வில்லனை படத்தில் பார்த்து விட்டு அப்படி நாம் இருக்கக் கூடாது என்றும் அப்படி நாம் பேசக் கூடாது என்று தான் நினைக்க வேண்டும். நல்லதையும் கெட்டதையும் சொல்லிக் கொடுத்து விட்டு, கெட்டதை ஒதுக்க கற்றுத் தர வேண்டும் என கமல் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X