குசுகுசுன்னு பேசாதீங்க.. குயின்ஸி, கதிரவனுக்கு குட்டு வைத்த கமல்.. அசல் கோலாருக்கும் ஆப்பு!

சென்னை: மைக்கை கழட்டி வைத்தும், மைக்கை நகர்த்தி விட்டு குசுகுசுன்னு போட்டியாளர்கள் சிலர் தொடர்ந்து பேசி வருவதை ரசிகர்கள் கண்டித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை எபிசோடின் ஆரம்பத்திலேயே அந்த விஷயத்தை கமல் கையில் எடுத்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் ரூல்ஸ் எல்லாம் மீறினால் அதிரடியாக தண்டனை கொடுக்கப்பட்ட வந்த நிலையில், இப்போ நிகழ்ச்சிக்கு வர போட்டியாளர்கள் கிடைப்பதே பெரும்பாடாக இருப்பதால், பிக் பாஸ் மற்றும் கமல்ஹாசன் அறிவுரை மட்டுமே அதிகம் வழங்குகின்றனர்.

கொஞ்சம் ஓவராக பேசினால் கூட வீட்டுக்குப் போறேன் என போட்டியாளர்கள் கிளம்பி விட்டால் அப்புறம் யாரை வைத்து சண்டை போடுவது..

மைக்கை மதிக்காமல்

மைக்கை மதிக்காமல்

பிக் பாஸ் போட்டியாளர்கள் வீட்டுக்குள் சில பேசிக் ரூல்களை ஃபாலோ செய்ய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால், கடந்த சில சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய புரிதலே இல்லாமலும், எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்கிற புத்தியுஅனும் சில போட்டியாளர்கள் மைக்கை சுத்தமாக மதிக்காமல் பல விஷயங்களை செய்து வருகின்றனர்.

குசுசுகுன்னு பேசாதீங்க குயின்ஸி

குசுசுகுன்னு பேசாதீங்க குயின்ஸி

ரகசியமாக மைக்கிற்கே கேட்காமல் ரசிகர்களுக்கே புரியாமல் குயின்ஸி, விஜே கதிரவன் உள்ளிட்ட சில போட்டியாளர்கள் தொடர்ந்து பேசி வருவதை இந்த வாரம் கமல் கண்டிப்பாரா? என்கிற கேள்வி எழுந்து வந்த நிலையில், குசுகுசுன்னு பேசாதீங்க குயின்ஸி என்று வெளுத்து வாங்கினார் கமல்ஹாசன்.

கோட் வேர்ட் கதிர்

கோட் வேர்ட் கதிர்

விஜே கதிரவன் குயின்ஸியிடம் அப்படி என்னதான் பா பேசுறாரு என்றும் குயின்ஸிக்கும் அவருக்கும் தனி ரொமான்டிக் டிராக் ஏதாவது ஓடுகிறதா என்றும் ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு கோட் வேர்ட் பலவற்றை பயன்படுத்தி பேசி வந்த நிலையில், கதிரவனையும் பகிரங்கமாக கமல் கண்டித்தார்.

அசலையும் விடல

அசலையும் விடல

அதே போல பல நேரங்களில் மைக்கை சரியாக மாட்டாமல் அசல் கோலார் கூட பேசி வருவதை கண்டித்தார் கமல். இன்னும் தனலட்சுமி மேட்டருக்கு வரலையே என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அடுத்ததாக அதையும் இழுத்து வைத்து நல்லபடியாக பஞ்சாயத்தை முடித்தார் கமல்ஹாசன்.

ரசிகர்கள் ஹாப்பி

ரசிகர்கள் ஹாப்பி

ஒரு வழியாக மைக் மேட்டரை கமல் கேட்டு விட்டார். இனிமேல், அடுத்த வாரத்தில் இருந்து குயின்ஸி, ஷெரினா, விஜே கதிரவன் எல்லாம் அப்படியே சத்தம் போட்டு பேசி, அவர்கள் என்ன பேசுறாங்க என்பதை நமக்கு புரிய வைத்து விடுவார்கள் என ரசிகர்கள் ஹேப்பியாகி உள்ளனர். ஆனால், அதெல்லாம் நடக்குமா? என்பது கேள்விக் குறி தான் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X