தூன்னு துப்புனது திட்டமிட்ட சதி.. தள்ளி விட்டது விதிமீறல்.. ரெட் கார்டு மிரட்டல் விடுத்த கமல்!

சென்னை: விளையாட்டில் விதிகளை மீறினால் கடைசி நேரத்தில் கூட ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்படுவார்கள் என தாமரை மற்றும் பிரியங்காவின் பஞ்சாயத்தை கையில் எடுத்து பேசும் போது கடுமையான மிரட்டலையும் கமல் விடுத்தது ரசிகர்களை ஷாக் ஆக்கியது.

பலம் கொண்டு கோபத்துடன் தள்ளி விட்ட விதிமீறலை தாமரை செய்தார் என்றும் அதற்கு சரி சமமாக அவரை அவமானப்படுத்தும் நோக்கில் பிரியங்கா தூன்னு துப்புனது இருந்தது என்றும் கமல் சுட்டிக் காட்டினார்.

என்ன திடீர்னு கமல் சார் ரெட் கார்டு பற்றி பேசுகிறாரே இருவரில் ஒருவருக்கு இந்த வாரமோ அல்லது அடுத்த வாரமோ ரெட் கார்டு கொடுக்கப்படுமா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வரம்பு மீறிய இருவர்

வரம்பு மீறிய இருவர்

இந்த வாரம் முட்டை உடைக்கும் டாஸ்க்கில் தாமரை மற்றும் பிரியங்கா போட்ட வரம்பு மீறிய சண்டை பிக் பாஸ் ரசிகர்களை கடுப்பாக்கியது. ராஜு மற்றும் பாவனி இடையே நடந்த மோதலை விட இது மிகவும் மோசமான விதிமீறலாக வெடித்தது என இருவர் பக்கமும் நம்மவர் சாட்டையை சுழற்ற ஆரம்பித்தார்.

விதிமீறல் பண்ணிட்டீங்க

விதிமீறல் பண்ணிட்டீங்க

சாதாரணமாக தள்ளிவிடுவதில் தொடங்கி அடித்து தள்ளிவிடுவது என ரொம்பவே விதிமீறல்கள் பண்ணிட்டீங்க தாமரை என்றதும் நேற்று நட்பாக பழகியதை எல்லாம் மறந்து விட்டு முகத்தை பிரியங்காவை விட மோசமாக அஷ்ட கோணத்தில் வைத்துக் கொண்டு விளக்கம் கொடுக்க தாமரை முன் வர விதிமீறல் விதிமீறல் தான் என கமல் கண்டித்து விட்டார்.

திட்டமிட்ட சதி

திட்டமிட்ட சதி

அதே போல தாமரையை பார்த்து பிரியங்கா தூ என துப்பியதை கண்டித்த கமல் அது திட்டமிட்ட சதி என்றும் தாமரையை அவமானப்படுத்தும் விதமாகவே உங்கள் செயல் இருந்தது என்றும் பகிரங்கமாக கண்டித்து விட்டார். இப்படியே விட்டா நம்மை சும்மா ரோஸ்ட் பண்ணி தள்ளிவிடுவார் என நினைத்த பிரியங்கா கமல் சாரே சிரிக்கும் படி டாப்பிக்கை திருப்பிப் போட்டார்.

பலே கேடிகள்

பலே கேடிகள்

தூன்னு துப்பி, நெஞ்சை பிடித்து தள்ளி விட்டு பெரும் கலவரம் நடந்த பிறகு அத்தனையையும் மறந்து விட்டு தாமரை பண்ணதை பார்த்து சிரிப்பு வந்துடுச்சு சார் அதனால் தான் ஒன்று சேர்ந்தோம் என பிரியங்கா கமல் சார் முன்னாடியே சிரித்துக் கொண்டு சொல்லி அப்படியே பிரம்மாஸ்த்திரத்தை தீபாவளி பட்டாசாக மாற்றி விட்டார். இருவரும் செம கேடிகள் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 2nd January 2022 - Promo 2 | Raju-வை சீண்டும் Niroop
ரெட் கார்டு மிரட்டல்

ரெட் கார்டு மிரட்டல்

தாமரை மற்றும் பிரியங்கா செய்தது விதிமீறல் என ஆரம்பத்திலேயே கண்டித்த கமல் விளையாட்டில் வெற்றியின் விளிம்பில் வந்து விட்டுக் கூட சிலருக்கு ரெட் கார்டு கிடைக்கப்பெற்று வெளியேறும் நிலை என சொன்னதை கேட்டு இருவரும் சைலன்ட் ஆனார்கள். ஆனால், கமல் சாரே ரெட் கார்டு பற்றி பேசிய நிலையில், இந்த வாரம் இல்லை என்றாலும் அடுத்த வாரம் இருவரை வெளியேற்ற ரெட் கார்டு ஆயுதத்தை பயன்படுத்தி விடுவாரா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X