கமல் பார்த்த சில நேரங்களில் சில மனிதர்கள் படம்... கேஷுவல் லுக்கில் கவனம் ஈர்த்த உலகநாயகன்
சென்னை : நடிகர் நாசர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் சில நேரங்களில் சில மனிதர்கள்.
விமர்சனரீதியாக அனைத்து தரப்பினரில் பாராட்டுக்களையும் இந்தப் படம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தை பார்த்துள்ள கமல், படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

சில நேரங்களில் சில மனிதர்கள் படம்
நடிகர் நாசர், அசோக் செல்வன், அபிஹாசன், பிரவீன் ராஜா, மணிகண்டன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 28ம் தேதி வெளியான படம் சில நேரங்களில் சில மனிதர்கள். கடந்த 1976ல் லஷ்மி, ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான படத்தின் தலைப்பை இந்தப் படமும் கொண்டுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

சிறப்பான வரவேற்பு
இந்நிலையில் இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றுள்ளது. வெவ்வேறு சூழலில் வாழும் 4 இளைஞர்கள் ஒரு விபத்தால் இணையும்போது அவர்கள் எதிர்கொள்ளும் சூழலை மையமாக கொண்டு இந்தப் படம் சிறப்பான திரைக்கதையும் வெளிவந்துள்ளது.

விஷால் வெங்கட் இயக்கம்
ஒவ்வொரு கேரக்டர்களும் இயல்பான வாழ்க்கை சூழலை, நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கை சூழலில் சந்திக்கும் கதாபாத்திரங்களாக இருப்பது படத்தின் திரைக்கதைக்கு கிடைத்த சிறப்பு. இயக்குநர் விஷால் வெங்கட் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

நிறைவான நடிப்பில் நாசர்
நாசர் எதிர்கொள்ளும் விபத்து அதையொட்டிய சம்பவங்களை கோர்வைப் படுத்தியுள்ளார் இயக்குநர். நாசர் சிறிது நேரமே வந்தாலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து செயல்பட்டுள்ளனர்.

உணர்வுபூர்வமான இசை
ஜெயகாந்தனின் பிரபல நாவலின் தலைப்போடு வந்துள்ள இந்தப் படம் அந்த தலைப்புக்கு மட்டுமின்றி ஜெயகாந்தனுக்கும் பெருமையை சேர்த்துள்ளது என்று கூறலாம். இசையமைப்பாளர் ரதன் உணர்வுபூர்வமான தனது பங்களிப்பை படத்திற்கு அளித்துள்ளார்.

படம் பார்த்த கமல்
முன்னதாக இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டரை உலக நாயகன் கமல் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது இந்தப் படத்தை பார்த்து படத்திற்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். மேலும் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் புகைப்படமும் எடுத்துள்ளார்.
Recommended Video

கேஷுவல் லுக்கில் கமல்
படத்தை மிகவும் கேஷுவல் லுக்கில் வந்து பார்த்துள்ளார் கமல். பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் மற்ற நிகழ்வுகளிலும் அவரை வேறு மாதிரி லுக்கில் பார்த்துவரும் நிலையில் தற்போது மிகவும் இயல்பான லுக்கில் அவர் படத்தை பார்க்க வந்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











