Project K: ப்ராஜெக்ட் K-னாலே கமல் தானா? பிரபாஸ் உடன் நேருக்கு நேர் மோதப்போவது எப்போ தெரியுமா?
சென்னை: முன்னா பாய் எம்பிபிஎஸ் ஹீரோ சஞ்சய் தத்தை கேஜிஎஃப் 2வில் வில்லனாக்கிய நிலையில், வசூல் ராஜா எம்பிபிஎஸ் கமல்ஹாசனும் தற்போது வில்லனாக தயாராகி விட்டாராம்.
பிரபாஸ் நடித்து வரும் பிரம்மாண்ட படமான ப்ராஜெக்ட் கே அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக கமல் நடிக்கப் போவது 90 சதவீதம் உறுதியான தகவல் எனக் கூறுகின்றனர்.

மேலும், இந்தியன் 2 ஷூட்டிங்கை முடித்து விட்டு கமல் அந்த படத்தில் எப்போது இணையப் போகிறார் என்கிற ஹாட் அப்டேட்டும் தற்போது வெளியாகி #ProjectK ஹாஷ்டேக்கில் டிரெண்டாகி வருகிறது.
பிரபாஸின் அடுத்த பிரம்மாண்டம்: நடிகர் பிரபாஸ் நடித்தாலே அந்த படம் பிரம்மாண்டமான படமாகத்தான் இருக்கும் என்கிற நிலை பாகுபலி படத்துக்கு பிறகே மாறிவிட்டது. நாளை ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக சலார் மற்றும் ப்ராஜெக்ட் கே என பிரபாஸ் தொடர்ந்து வரிசையாக பிரம்மாண்ட பிரம்மாஸ்திரங்களை களமிறக்க காத்திருக்கிறார்.

உலகம் முழுவதும் ஆதிபுருஷ் படத்தின் ப்ரீ புக்கிங் வேகமாக சென்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் பெரிதாக டிக்கெட் விற்பனை நடைபெறவில்லை என்றும் ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வில்லனான கமல்: ஆளவந்தான், தசவதாரம் உள்ளிட்ட படங்களில் தனது வில்லத்தனத்தை நடிகர் கமல்ஹாசன் தான் நடித்த படங்களிலேயே காட்டி உள்ள நிலையில், நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ப்ராஜெக்ட் கே படத்திலும் பயங்கரமாக காட்டப் போவது உறுதியாகி விட்டதாக கூறுகின்றனர்.
இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவுபெற உள்ள நிலையில், அடுத்ததாக ஹெச். வினோத் இயக்கத்தில் கமல் இணைவதற்கு முன்னதாக பிரபாஸ் படத்தை முடிக்கப் போவதாக கூறுகின்றனர்.

ஆகஸ்ட்டில் ஆரம்பிக்கலாமா: பிரபாஸுக்கு வில்லனாக நடிகர் கமல்ஹாசன் வரும் ஆகஸ்ட் மாதம் ப்ராஜெக்ட் கே படத்தில் நடிக்கப் போவதாகவே ஹாட் அப்டேட்கள் தற்போது வெளியாகி #ProjectK ஹாஷ்டேக்கில் டிரெண்டாகி வருகின்றன.
தென்னிந்திய ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர பிரபாஸ், கமல்ஹாசன் உள்ள நிலையில், பாலிவுட் ரசிகர்களுக்குத் தீனிப் போட தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் அமிதாப் பச்சன் இந்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் தீவிர கமல் ரசிகர்: லோகேஷ் கனகராஜ் எப்படி தீவிர கமல் ரசிகரோ அதே போலத்தான் நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வினும் தீவிர கமல் ரசிகராம். சமீபத்தில், அளித்த பேட்டியில் கமல் சாரின் பழைய படங்கள் தான் அதிகளவில் பார்த்து சினிமாவையே கற்றுக் கொண்டேன் எனக் கூறியுள்ளார்.
கமல்ஹாசனை வில்லனாக வைத்து அவரது மொத்த நடிப்புத் திறமையையும் திரையில் காட்டி மிரட்டவே இப்படியொரு ஏற்பாட்டை பிரபாஸ் படத்தில் செய்ய காத்திருக்கிறாராம் இயக்குநர் நாக் அஸ்வின்.


Click it and Unblock the Notifications











