Rajini 171 - லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினி 171... குடைச்சல் கொடுக்கும் கமல் ஹாசன்? குழப்பத்தில் ரஜினி?

சென்னை: Rajini 171 (ரஜினி171) லோகேஷ் கனகராஜும், ரஜினிகாந்த்தும் இணையும் ரஜினி 171 படத்தில் குழப்பம் இன்னமும் நீடித்துவருவதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் தனது ஐந்தாவது படமாக லியோவை இயக்கிவருகிறார். இதற்கு முன்னர் அவர் இயக்கிய நான்கு படங்களும் வரிசையாக ஹிட்டடித்துள்ளன. இதன் காரணமாக லியோவும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கின்றனர். லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.லியோ படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் என்ன படம் இயக்கப்போகிறார் என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

Kamal Haasan Will produce rajini 171th Movei

கைதி 2,தலைவர் 171:

லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கைதி 2 படத்தை இயக்குவது உறுதியாகியிருக்கிறது. ஆனால் அந்தப் படத்துக்கு முன்னதாகவே ரஜினியை வைத்து ஒரு படம் இயக்குவார் என பரவலாக பேசப்பட்டது. அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் இயக்குநர் மிஷ்கின், லோகேஷ் அடுத்ததாக ரஜினியை வைத்து படம் செய்யப்போகிறான் என்றார்.லியோவில் அவர் ந்டித்திருப்பதால் மிஷ்கின் சொன்னதை அடுத்து லோகேஷ் - ரஜினி படம் உறுதி என நம்பப்படுகிறது.

கைதி 2 கதி என்ன?:

கைதி படத்தின் இரண்டாம் பாகம் பணிகள் ரொம்ப நாள்களாகவே அப்படியே இருக்கின்றன. நடிகர் கார்த்தியும் அதில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார். ஆனால் லோகேஷின் கிராஃபை பார்க்கும்போது லியோவை முடித்துவிட்டு ரஜினி படத்தை இயக்க சென்றுவிடுவார். அதனை முடித்த பிறகுதான் கைதி 2வுக்கு வருவார் என சிலர் கூறுகின்றனர். அதேசமயம், ரஜினி அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார். ரஜினி அந்தப் படத்தை முடிப்பதற்குள் லோகேஷ் கைதி 2வை முடித்துவிடலாம். எனவே அடுத்து லோகேஷ் கைதி 2வைத்தான் இயக்குவார் என்றும் பேச்சு ஓடுகிறது.

ரஜினி 171க்கு போட்டி:

இதற்கிடையே ரஜினி - லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தை தயாரிப்பதற்கு மொத்தம் 7 தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிப்போடுவதாக பரவலாக பேசப்பட்டது. இவற்றில் சன் பிக்சர்ஸும் ஒன்று. சன் பிக்சர்ஸுடன் ரஜினிக்கு நல்ல புரிதல் இருப்பதால் அந்த நிறுவனத்துக்கே படத்தை கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக லோகேஷ் கனகராஜுக்கு 50 கோடி ரூபாய்வரை சம்பளம் கொடுக்கப்படலாம் என்றும் தகவல் வெளியானது.

Kamal Haasan Will produce rajini 171th Movei

குறுக்கே வந்த கமல்:

ஆனால் இப்போது நிலைமையே வேறு மாதிரி இருக்கிறதாம். அதாவது சன் பிக்சர்ஸ் ஓகே என்றாலும் அதற்கான ஒப்பந்தமே இன்னும் கையெழுத்து ஆகவில்லையாம். அதற்கு காரணம் தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்திவரும் கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இந்தப் படம் குறித்த தகவல் வெளியானபோது ரஜினி 171ஐ கைப்பற்றிவிட கோதாவில் குதித்ததாம். இப்போது அந்த நிறுவனம் மீண்டும் தனது முயற்சியை தீவிரப்படுத்தியிருக்கிறதாம்.

குழப்பத்தில் ரஜினிகாந்த்:

இதன் காரணமாகத்தான் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம்; மேலும், நன்மதிப்பை பெற்ற சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிப்பதா இல்லை நண்பரின் தயாரிப்பில் நடிப்பதா என்ற குழப்பத்திலும் ரஜினி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்போது லால் சலாம் படத்தில் நடித்துவருகிறார். இவற்றில் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X