ரசிகர்களின் அன்புத் தொல்லை… கமலின் அதிரடி முடிவு… அந்த ஹீரோவுடன் மீண்டும் தொடங்கும் மருதநாயகம்

சென்னை: கமல்ஹாசனின் கனவுப் படமான மருதநாயம் 1997ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது.

மருதநாயகம் படத்தின் தொடக்க விழாவில் மறைந்த இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பட்ஜெட் பிரச்சினை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்ட மருதநாயகம் படத்தை மீண்டும் எடுக்க கமல்ஹாசன் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமலின் கனவுப் படம்

கமலின் கனவுப் படம்

தமிழ் சினிமாவில் ஏராளமான புதிய முயற்சிகளை செய்து காட்டிய உலகநாயகன் கமல்ஹாசனின் கனவுப் படம் என்றால் அது மருதநாயகம் தான். 1997ம் ஆண்டு மருதநாயகம் படத்தை மிகப் பிரம்மாண்டமாக தொடங்கினார் கமல்ஹாசன். சென்னையில் நடைபெற்ற மருதநாயகம் பட தொடக்கவிழாவில், மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில், அப்போது தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி, உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மருதநாயகம் படத்தின் தொடக்க விழாவை இந்திய திரையுலகமே பார்த்து வியந்தது.

பட்ஜெட் பிரச்சினை

பட்ஜெட் பிரச்சினை

1997 அக்டோபர் 16ம் தேதி மருதநாயகம் தயாரிப்பு பணிகள் தொடங்கின. 18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த முகமது யூசுஃப் கான் குறித்த திரைப்படமாக இது உருவாக இருந்தது. அப்போதே அதிகமான பட்ஜெட்டில் இந்தத் திரைப்படத்தை தயாரிக்க கமல் முடிவு செய்திருந்தார். இதனால் மருதநாயகம் திரைப்படம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. மேலும், மருதநாயகம் படத்தில் இருந்து சில காட்சிகளையும் கமல்ஹாசன் வெளியிட்டார். ஆனால், பட்ஜெட் பிரச்சினை காரணமாக மருதநாயகம் படம் அப்படியே பாதியில் நின்றுப் போனது.

மீண்டும் தொடங்க திட்டம்

மீண்டும் தொடங்க திட்டம்

அதன் பிறகு மருதநாயகம் படத்தை மீண்டும் தொடங்காமல் அப்படியே விட்டுவிட்டார் கமல். ஆனால், தற்போது விக்ரம் திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ள கமலிடம், மருதநாயகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். விக்ரம் ஆடியோ வெளியீட்டில் கூட மருதநாயம் படம் பற்றி சிம்பு பேசியிருந்தார். அதேபோல், சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் வெளியாகி ஹிட் அடித்தது. மருதநாயகமும் பொன்னியின் செல்வன் மாதிரி பீரியட் படம் என்பதால், மீண்டும் கமல் அதை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர்.

புதிய ஹீரோவுடன் தொடங்குகிறது?

புதிய ஹீரோவுடன் தொடங்குகிறது?

தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து மருதநாயகம் படத்தை மீண்டும் தொடங்க கமல் முடிவெடுத்துள்ளாராம். ஆனால், அவர் ஹீரோவாக நடிக்காமல் இயக்குராக மட்டும் களமிறங்க முடிவு செய்துள்ளாராம். கமல் கேரக்டரில் விக்ரம் அல்லது சூர்யாவை நடிக்க வைக்க யோசித்து வருகிறாராம். பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தார் விக்ரம். அதேபோல், சூர்யாவும் அவரது 42வது படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பல வருடங்களுக்குப் பிறகு மருதநாயகம் படத்தின் பேச்சு மீண்டும் அடிபடுவதால், ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X