அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை

By

சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டது என அவர் மகள்கள், ஸ்ருதிஹாசனும் அக்‌ஷரா ஹாசனும் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

ஆப்பரேஷன் சக்சஸ்... நம்மவர் நலமாக இருக்கிறார் ...கமல் மகள்கள் கூட்டு அறிக்கை!

சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை அடுத்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

கடந்த டிசம்பர் மாதம் மதுரையில் தொடங்கிய பிரசாரத்தை, அவர் 5 கட்டமாக நிறைவு செய்துள்ளார்.

ஓய்வு தேவை

ஓய்வு தேவை

இந்நிலையில் உடல்நிலை காரணமாக தேர்தல் பிரசாரத்தை ஒத்தி வைத்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் காலில் அறுவை சிகிச்சை செய்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இன்னொரு சர்ஜரி செய்ய வேண்டி இருந்தது. அதுவரை ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தார்கள்.

அரசியல் சேவை

அரசியல் சேவை

அதை மீறித்தான் சினிமா வேலைகளும், அரசியல் சேவைகளும் தொடர்ந்தன. பிரசாரத்தை தொடங்கும்போதே, காலில் வலி இருந்தது. அதற்கு மக்களின் அன்பே மருந்தாக அமைந்தது. இப்போது சிறிய ஓய்வு கிடைத்திருக்கிறது. ஆகவே காலில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன்.

சந்திக்க இயலாது

சந்திக்க இயலாது

சில நாட்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் என் பணிகளை புதிய விசையுடன் தொடர்வேன்.
மக்களை நேரில் சந்திக்க இயலாது எனும் மனக்குறையை தொழில்நுட்பத்தின் வாயிலாக போக்கிக் கொள்ளலாம். இந்த மருத்துவ விடுப்பில் உங்களோடு இணையம் வழியாகவும், வீடியோக்கள் வழியாகவும் பேசுவேன் என்று கூறியிருந்தார்.

நடிகை ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன்

இந்நிலையில் அவருக்கு இன்று காலை அறுவைச் சிகிச்சை முடிந்துள்ளது. இதுபற்றி கமல்ஹாசன் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கையில், 'ஶ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவர் ஜே.எஸ்.என் மூர்த்தி ஒருங்கிணைப்பில் அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் மோகன்குமார் தலைமையில் அப்பாவிற்கு சர்ஜரி வெற்றிகரமாக முடிந்தது.

மக்களை சந்திப்பார்

மக்களை சந்திப்பார்

அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார். அப்பாவை மருத்துவர்கள், பணியாளர்களும் மருத்துவமனை நிர்வாகமும் நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்குப் பிறகு அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மக்களை சந்திப்பார். மகிழ்விப்பார் என்று கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X