அமரனை காப்பாற்றிய ஆண்டவர்.. இந்தியன் 3க்கு கிடைக்கப்போகும் விமோச்சனம்.. இறங்கி வந்த லைகா?

சென்னை: கமல்ஹாசன் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளது. ஒட்டுமொத்தமாக 150 கோடி வசூல் வந்துவிட்டதாக வெற்றி விழாவில் சிவகார்த்திகேயனே பாக்ஸ் ஆபிஸ் குறித்து வெளிப்படையாக பேசிவிட்டார்.

அமரன் படத்தின் இந்த மகத்தான வெற்றிக்கு முக்கிய காரணமே கமல்ஹாசன் தானாம். படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியை பார்த்த அவர் அந்த படத்தில் செய்ய வேண்டிய மாற்றங்களை சரியாக குறிப்பிட்டு இயக்குநரிடம் சொல்ல, அதை எல்லாம் சரி செய்து விட்டு படத்தை வெளியிட்டது தான் எந்தவொரு இடத்திலும் பிசிறு தட்டாமல் படம் அனைவரையும் கவர்ந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்கின்றனர்.

amaran kamal haasan indian 3

இந்தியன் 2 படத்தை விட தனக்கு இந்தியன் 3 தான் பிடிக்கும் என கமல் சொன்ன நிலையில், அமரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தியன் 3 படத்துக்கும் விமோச்சனம் கிடைத்திருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.

இந்தியன் 2 படுதோல்வி: கமல்ஹாசன் நடித்த கமர்ஷியல் மற்றும் காமெடி படங்கள் தோல்வியை தழுவினாலும் அவர் கதையம்சம் கொண்டு பிராஸ்தெடிக் மேக்கப் எல்லாம் போட்டு வந்தால் அந்த படங்கள் எல்லாம் பெரிய வெற்றி பெறும். ஆனால், இந்தியன் 2 படத்தில் ஷங்கர் செய்த பெரும் சொதப்பல் காரணமாக அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த ஆண்டின் நம்பர் ஒன் சொதப்பல் படமாகவும் இந்தியன் மாறியது குறிப்பிடத்தக்கது.

அமரன் வெற்றிக்கு ஆண்டவர் காரணம்: கமல்ஹாசன் இல்லை என்றால் அமரன் திரைப்படம் இந்தளவுக்கு ஒரு வெற்றிப் படமாக வந்திருக்காது என்றும் அதற்காக அவர் மெனக்கெட்டு நிறைய விஷயங்களை செய்திருக்கிறார் என்கின்றனர். இதுவரை ராணுவ படங்களில் பார்க்காத இடங்களையும் கமல்ஹாசனின் இன்ஃப்ளூயன்ஸ் காரணமாக கிடைத்த அனுமதி வழியாகவே இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தத்ரூபமாக அந்த படத்தை கொடுத்துள்ளார் என்றும் படத்தில் இருந்து சிறு சிறு மிஸ்டேக்குகளையும் படம் வெளியாவதற்கு முன்னதாக கரெக்ட் செய்தது கமல்ஹாசன் தான் என்கின்றனர்.

இந்தியன் 3க்கு விமோச்சனம்: வரும் ஜனவரி மாதம் இந்தியன் 3 படத்தை அப்படியே நேரடியாக ஓடிடியில் வெளியிட்டு விடலாம் என்கிற நிலைக்கே லைகா நிறுவனம் வந்துவிட்ட நிலையில், அந்த படத்திற்கு இன்னும் ஒரு 30 நாட்கள் படப்பிடிப்பை நடத்தினால் படத்தை காப்பாற்றலாம் என கமல்ஹாசன் சொன்ன நிலையில், அப்போது ஆமோதிக்காத லைகா நிறுவனம் கமலின் இன்புட் காரணமாக அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை உணர்ந்துக் கொண்டு இந்தியன் 3 படத்துக்கு மேலும், சில கோடிகளை செலவு செய்யலாம் என்கிற முடிவுக்கு வந்திருப்பதாக கூறுகின்றனர்.

வேறலெவல் பிஸி: கமல்ஹாசன் இருக்கும் பிஸிக்கு இந்தியன் 3 படத்தை அப்படியே கண்டுக் கொள்ளாமல் விட்டு விடலாம் என்றும் ஆனால், அவர் அப்படி செய்யமாட்டார். அவர் தீவிர சினிமா காதலர் என்பதால், எப்படியாவது இந்தியன் 3 படத்தை காப்பாற்ற அனைத்து வேலைகளையும் செய்யப் போகிறார் என்கின்றனர். தக் லைஃப், அன்பறிவ் மாஸ்டர்கள் படம், கல்கி 2 என ஏகப்பட்ட படங்களில் கமல்ஹாசன் பிஸியாக இருந்தாலும் இந்தியன் 3 படத்தை முழுமையாக சரி செய்து மக்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X