இந்திய மருத்துவர்களை நம்புகிறேன்.. இரு பச்சன்களும் விரைவில் குணமடைவார்கள்.. கமல்ஹாசன் ட்வீட்!
சென்னை: அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் விரைவில் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வருவார்கள் என கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று பரவிய செய்தி அறிந்து, பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்கள் மற்றும் பல கோடி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
1985ம் ஆண்டு வெளியான கெராஃப்தார் படத்தில் அமிதாப் பச்சன் உடன் இணைந்து நடித்துள்ள கமல்ஹாசன் தற்போது அமிதாப் பச்சன் பூரண நலத்துடன் மீண்டும் பழையபடி குணமடைவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமிதாப் பச்சன் அறிவிப்பு
நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று பரவியது என்ற தகவல்கள் வந்த நிலையில், அது பொய்யாக இருக்குமோ என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் இருந்து, தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தனது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமிதாப் பச்சன் பதிவிட்டு அதனை உறுதி செய்தார். அபிஷேக் பச்சனும் தனக்கும் கொரோனா பாசிட்டிவ் என்பதை உறுதி செய்தார். ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயா பச்சனுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை.

அதிகரிக்கும் பிரார்த்தனை
நள்ளிரவு முதலே பல பிரபலங்கள் 77வயதான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை செய்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசனும் அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய வேண்டும் என ட்வீட் போட்டுள்ளார்.

இந்திய மருத்துவர்களை நம்புகிறேன்
இரண்டு பச்சன்களுமே விரைவில் பூரண நலம் பெற்று விடு திரும்ப வேண்டும் என்றும், இந்திய மருத்துவர்களை நான் நம்புகிறேன், உடல் உபாதைகளை வென்று சீனியர் பச்சன் மீண்டு வருவார், மீண்டும் ஒருமுறை தன்னால் மீண்டு எழ முடியும் என்பதை அமிதாப் பச்சன் உணர்த்துவார் என நடிகர் கமல்ஹாசன் தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.

உடல் நலனில் முன்னேற்றம்
நடிகர் அமிதாப் பச்சன் உடல் நிலை முன்னேறி வருவதாகவே மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு லேசான கொரோனா அறிகுறியே உள்ளதாகவும், யாரும் பயப்படவோ, தேவையற்ற வதந்திகளை பரப்பவோ வேண்டாம் என மும்பை சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











