இயக்குநர் ஷங்கருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கமல்.. இந்தியன் 2வை டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

சென்னை: இந்திய சினிமாவை மட்டுமின்றி உலக சினிமா ரசிகர்களையும் தனது பிரம்மாண்டத்தால் கோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ஷங்கரின் 59வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் இயக்குநர் ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் 'இந்தியன்' எனக் குறிப்பிட்டே வாழ்த்தியதும் கோட் வேர்ட் அக்செப்டட் என ரசிகர்கள் இந்தியன் 2 ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்திய சினிமாவின் பிரம்மாண்டம்

இந்திய சினிமாவின் பிரம்மாண்டம்

இயக்குநர் ராஜமெளலிக்கே பிரம்மாண்டத்தின் பாடத்தை சொல்லிக் கொடுத்த பாஸ் தான் இயக்குநர் ஷங்கர். ஹாலிவுட் இயக்குநர்களான ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீவ் ஸ்மித் போன்ற இயக்குநர்களின் பிரம்மாண்ட படைப்புகளால் ஈர்க்கப்பட்ட ஷங்கர் தமிழ் சினிமாவில் அப்படியொரு படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார்.

பான் இந்தியா பாஸ்

பான் இந்தியா பாஸ்

பான் இந்தியா டிரெண்டிங் சமீப காலமாக டிரெண்டாகி வரும் நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவில் அதை அறிமுகப்படுத்திய பான் இந்தியா பாஸ் தான் நம்ம ஷங்கர். இப்பவும் தெலுங்கில் ராம்சரண் உடன் ஒரு படம், பாலிவுட்டில் ரன்வீர் சிங் உடன் ஒரு படம் என ஷங்கர் கைவசம் பெரிய படங்கள் உள்ளன.

கமல் வாழ்த்து

கமல் வாழ்த்து

'இந்தியன்' என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர் shankarshanmugh அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என இந்தியன் படத்தையும் குறிப்பிட்டு கமல் வாழ்த்தி உள்ளார்.

இந்தியன் 2 அப்டேட்

இந்தியன் 2 அப்டேட்

கமல் வாழ்த்திய உடனே கோட் வேர்ட் அக்செப்டட் என நெட்டிசன்கள் இந்தியன் 2 ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். நெடுமுடி வேணு கதாபாத்திரத்திற்கு பதில் கார்த்தி இந்த படத்தில் இணையலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. செப்டம்பர் 13ம் தேதி இந்தியன் 2 படம் ஆரம்பமாகும் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Recommended Video

Aditi Shankar பெரிய நடிகையா வருவாங்க | Actor Soori Speech
எல்லாமே பிரம்மாண்டம்

எல்லாமே பிரம்மாண்டம்

கதை மற்றும் காட்சி என தனது படங்களை பிரம்மாண்டமாக இயக்கி ரசிகர்கள் கொடுக்கும் காசுக்கு மேல் படத்தை காட்டும் இயக்குநர் தான் ஷங்கர் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன், 2.0 என இந்திய சினிமாவையே மிரட்டிய ஷங்கரின் இந்தியன் 2 மற்றும் ஆர்சி 15 படங்களுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X