சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலைக் கொண்டவர் தம்பி விஜய்சேதுபதி.. கமல் வாழ்த்து!

சென்னை: மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு உலகநாயகன் கமல்ஹாசன் மனமார பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

Recommended Video

தன் கண்ணையே நம்ப முடியாமல்... ரசிகர்களின் செய்கையால் உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்

நடிகர் விஜய்சேதுபதி இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விஜய்சேதுபதி பிறந்தநாள்

விஜய்சேதுபதி பிறந்தநாள்

மக்கள் செல்வன் என ரசிகர்கள் கொண்டாடி வரும் திறமையான நடிகர் விஜய்சேதுபதியின் 44வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1978ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி ராஜபாளையத்தில் பிறந்தவர் நடிகர் விஜய்சேதுபதி. துணை நடிகராக இருந்து முன்னணி நடிகராக தனது உழைப்பால் உயர்ந்தவர் விஜய்சேதுபதி.

சந்தையின் பின்னே போகாமல்

சந்தையின் பின்னே போகாமல்

"சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலைக் கொண்டவர் தம்பி விஜய்சேதுபதி. கதையின் நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர். அவரது தேடலும் துணிச்சலும் வீண்போகாது. தம்பி விஜய்சேதுபதிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்." என கமல் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

கமலுக்கு வில்லன்

கமலுக்கு வில்லன்

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்து மிரட்டிய விஜய்சேதுபதி அடுத்ததாக கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படத்திலும் வில்லனாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியன் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆன நிலையில், விக்ரம் படத்தில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் வெயிட்டிங்

ரசிகர்கள் வெயிட்டிங்

கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் என தேசிய விருது வென்ற மூன்று அற்புதமான நடிகர்கள் நடிப்பில் அட்டகாசமாக உருவாகி வரும் விக்ரம் படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்யப் போகும் தரமான சம்பவத்தை காண ரசிகர்கள் வெயிட்டிங்.

ஒரு ஹிட் வேண்டும்

ஒரு ஹிட் வேண்டும்

கடந்த ஆண்டு மாஸ்டர் படத்தைத் தவிர விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான லாபம், துக்ளக் தர்பார் மற்றும் அனபெல் சேதுபதி ஆகிய மூன்று படங்களும் தோல்வியை தழுவின. இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதி கம்பேக் கொடுக்க அவருக்கு விரைவிலேயே ஒரு ஹிட் கிடைக்க வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், விக்ரம் என வரிசை கட்டி பல படங்கள் காத்திருக்கின்றன. பாலிவுட்டில் கத்ரீனா கைஃப் உடனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X