சினிமாவின் நியூ நார்மலுக்கு ஏற்ப ஒரு கதை எழுதும் கமல்ஹாசன்... லாக்டவுன் முடிந்ததும் ஷுட்டிங்!
சென்னை: சினிமாவின் நியூ நார்மலுக்கு ஏற்ப நடிகர் கமல்ஹாசன் கதை எழுதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். அவரது நடிப்பை பற்றி சொல்லி தெரிவதற்கில்லை.
நடிப்பிலும் சரி திரைத்துறை சம்பந்தமான தொழில்நுட்ப அறிவிலும் சரி நடிகர் கமல்ஹாசனை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. அந்தளவுக்கு தொழில்நுட்பத்தில் அப்டேட்டானவர் கமல்.

டிடிஹெச்சில்
திரைப்படத் தயாரிப்போடு தொடர்புடைய பல்வேறு விஷயங்களிலும் பல புதுமைகளைக் கொண்டுவந்த பெருமையும் இவருக்கு உண்டு. OTT தளங்கள் நடைமுறையில் இல்லாத காலத்திலேயே, விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச்சில் வெளியிட முயற்சித்தார் கமல்.

போட்டி போடுகிறாரர்கள்
இதில் விஷயம் என்னவென்றால், கமலின் இந்த முயற்சியை அப்போது எதிர்த்த சில தயாரிப்பாளர்கள் இன்று தங்கள் திரைப்படங்களை OTT தளத்தில் வெளியிட போட்டி போட்டு வருகின்றனர். மேக்கப் முதல் டிஜிட்டல் ஒலி வரை, இந்திய சினிமாவுக்கு கமலின் பங்களிப்பு ஈடு இணையற்றது.

ஓடிடியில் ரிலீஸ் செய்ய
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இந்த லாக்டவுன் நேரத்தில் ஒரு திரைக்கதையை எழுதியிருக்கிறார். நேரடியாக OTT தளத்தில் படத்தை ரிலீஸ் செய்யும் எண்ணத்தில் கமல்ஹாசன் இந்த கதையை எழுதியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிப்பாரா இயக்குவாரா?
குறைந்தபட்ச படகுழுவினர் மற்றும் ஒரு சில நடிகர்களுடன் லாக்டவுன் நீக்கப்பட்டவுடன், கமல்ஹாசன் படப்பிடிப்பைத் தொடங்குவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், கமல் படத்தில் நடிப்பாரா, இயக்குவாரா அல்லது தயாரிப்பாரா என்பது குறித்த எந்த தகவலும் உறுதியாக வெளிவரவில்லை.


Click it and Unblock the Notifications











