Crazy Mohan: கிரேசி மோகன் எப்படிப்பட்டவர் தெரியுமா? பளீச்சுனு சொன்ன உலகநாயகன் கமல்ஹாசன்!

சென்னை: தமிழ் சினிமா வரலாற்றில் பலரும் இடம் பெற்றிருந்தாலும் அந்தந்த காலகட்டத்தில் ஒரு சில கலைஞர்கள் மட்டுமே தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறியுள்ளார்கள். அவர்களின் கலைத் திறமையால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியவர்களும் உள்ளனர். அப்படி தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்கியவர் மறைந்த நடிகர், வசனகர்த்தா திரைக்கதை ஆசிரியர் கிரேசி மோகன். இவருக்கு தமிழ் சினிமாவின் அரியாசனத்தில் என்றைக்கும் தனி இடம் உண்டு. இன்று அவருடைய 71வது பிறந்த நாள். இந்நிலையில் அவர் குறித்த நினைவுகளை கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் கிரேசி மோகன் நட்பு என்பது திரையுலகில் அனைவருக்கும் தெரிந்ததே. கமல் படத்தில் கிரேசி மோகன் வசனம் எழுதுகின்றார் என்றாலே, அந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் என்றைகும் தனி வரவேற்பு உண்டு. மேலும் இவர்களின் கூட்டணியில் வெளியான படங்கள் இன்றைக்கும் எவர் க்ரீன் லிஸ்ட்டில் உள்ளது.

kamal haasan crazy mohan birthday

இவர்கள் இருவரும் முதலில் இணைந்து பணியாற்றிய படம், அபூர்வ சகோதரர்கள். அந்தப் படத்தின் வெற்றி இருவரையும் தமிழ் சினிமாவின் உச்சத்திற்கே கொண்டு சேர்த்தது. அண்மையில் நடைபெற்ற இந்தியன் 2 படத்தின் செய்தியாளர் சந்திப்பு மும்பையில் நடைபெற்றபோது கூட, அபூர்வ சகோதரர்கள் படம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதன் பின்னர் இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றினர். குறிப்பாக, மகளிர் மட்டும், சதிலீலாவதி, இந்திரன் சந்திரன், அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், தெனாலி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற படங்கள் என்றைக்கும் எவர் க்ரீன்தான்.

ரஜினி: இதில் அவ்வை சண்முகி படத்தினைப் பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரடியாக கிரேசி மோகனுக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல், அவருடன் இணைந்து பணியாற்ற தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து அவர் பணியாற்றிய படம் அருணாச்சலம். இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

kamal haasan crazy mohan birthday

கமல்: இப்படி தனது வசனங்களால் பெயர் பெற்ற கிரேசி மோகன், கடந்த 2019ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமாவின் மாபெரும் இழப்பாக இன்றைக்கும் பார்க்கப்படுகின்றது. மேலும் அவரது நெருங்கிய நண்பரான கமல்ஹாசன், கிரேசி மோகனின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் அவருடனான நினைவுகளை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று கிரேசி மோகனின் பிறந்த நாளை முன்னிட்டு, தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறித்து எழுதியுள்ளார்.

kamal haasan crazy mohan birthday

பதிவு: அதில், 'வேடிக்கையான வசனங்களாலும், நகைச்சுவை ததும்பும் கதைசொல்லல் முறையாலும், மறக்கவியலாப் பாத்திரப் படைப்புகளாலும் தமிழ்த் திரையில் தன் தடங்களை விட்டுச் சென்றிருக்கும் அன்பு நண்பர் கிரேசி மோகனின் பிறந்தநாளில் அவரோடு பணியாற்றிய காலங்கள் என்னுள் இனிய நினைவுகளை உசுப்பிப் பார்க்கின்றன' எனக் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X