Alavanthan Trailer: அந்த இரண்டு கண்ணு மீசை.. இப்பவும் மிரட்டுதே.. ஆளவந்தான் டிரெய்லர் ரிலீஸ்!

சென்னை: கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்துள்ள ஆளவந்தான் திரைப்படம் வரும் டிசம்பர் 8ம் தேதி ரீ ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் புதிய டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் இந்த படத்தில் நிர்வாணமாக நடித்தது மிகப்பெரிய சர்ச்சையை அப்போது கிளப்பியது. நந்து கதாபாத்திரத்தில் பாம்பு டாட்டூவை உடல் முழுக்க போட்டுக் கொண்டு அவர் நடித்த காட்சிகளை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் விட்டனர்.

Kamal Haasans Aalavandhan latest trailer released

ஆளவந்தான்: 2001ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன், ரவீனா டாண்டன் மற்றும் மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் நடித்த ஆளவந்தான் திரைப்படம் மீண்டும் 22 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து இருந்தார்.

அப்போது ஓடவில்லை: ஆளவந்தான் படம் ரிலீஸ் சமயத்தில் அந்த கடவுள் பாதி மிருகம் பாதி பாடல் ஹிட் அடித்த நிலையில், படத்தின் கதை மற்றும் காட்சிகள் ஏதும் புரியவில்லை என்றும் ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்த நிலையில், அந்த படத்தை மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டாமல் பார்க்கவே இல்லை. அதிக பட்ஜெட்டில் உருவான ஆளவந்தான் படம் ஃபிளாப் ஆகி விட்டது.

Kamal Haasans Aalavandhan latest trailer released

கில் பில்: ஹாலிவுட்டில் வெளியான கில் பில் படத்திற்கே இந்த படம் தான் இன்ஸ்பிரேஷன் என்றெல்லாம் சொல்லப்பட்டது. மேலும், பல ஆண்டுகள் கழித்து இந்த படம் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டுக்களை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தை வரும் டிசம்பர் 8ம் தேதி ரிலீஸ் செய்து இந்த முறையாவது வசூலை அள்ள கலைப்புலி எஸ். தாணு முயற்சித்து வருகிறார்.

ஆளவந்தான் டிரெய்லர்: ஆளவந்தான் என்றதுமே அந்த இரண்டு கண்களும் மீசையும் வரைந்த டிசைன் தான் ரசிகர்களை முதலில் கவர்ந்தது. இப்போ வெளியாகி உள்ள டிரெய்லரில் கமல் இரு வேடங்களிலும் நடிப்பில் சும்மா மிரட்டி எடுத்துள்ளார். வேட்டையாடு விளையாடு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் வேட்டை நடத்திய நிலையில், ஆளவந்தான் படமும் ஹிட் அடிக்கும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X