இந்தியன் 2 ஐமேக்ஸ் வசூல் மட்டும் இத்தனை கோடி வருமா?.. உலகம் முழுவதும் லியோவை விட அதிக ஸ்க்ரீன்கள்!
சென்னை: இந்தியன் 2 திரைப்படம் நாளை பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகிறது. மற்ற இடங்களில் சிறப்பு காட்சி காலை 6 மணிக்கே ஆரம்பம் ஆகிறது. தமிழ்நாட்டில் சிறப்பு காட்சி காலை 9 மணிக்குத் தொடங்குகிறது. ஆந்திராவில் 390 ரூபாய்க்கு இந்தியன் 2 படத்தின் டிக்கெட்டுகளின் விலையை உயர்த்திக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அதற்கும் அனுமதி கிடைக்கவில்லையாம்.
190 ரூபாய் டிக்கெட் தான் இந்தியன் 2 படத்துக்கு தமிழ்நாட்டில் வசூல் செய்யும் சூழல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐமேக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சம் 460 ரூபாய் டிக்கெட் வசூல் செய்யப்படுவதாக கூறுகின்றனர். தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்களில் 1500 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை ஐமேக்ஸ் தியேட்டர் டிக்கெட் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கூறுகின்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தியன் 2 திரைப்படம் நாளை வெளியாகிறது. கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, எஸ்.ஜே. சூர்யா, நெடுமுடி வேணு, விவேக் மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ஐமேக்ஸ் டிக்கெட் வசூல்: இந்தியாவில் உள்ள 24க்கும் மேற்பட்ட ஐமேக்ஸ் ஸ்க்ரீன்களில் மட்டுமே அதிகபட்சமாக இந்தியன் 2 படத்திற்கான வசூல் ஒரு நாளைக்கு 4 கோடி ரூபாயை அள்ளிக் கொடுக்கும் என்கின்றனர். உலகளவில் உள்ள அனைத்து ஃபார்மேட்களுக்கும் இந்த படத்தின் கன்டென்ட் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு விட்டதாம். முதல் வாரத்தில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூலை ஐமேக்ஸ் டிக்கெட் வசூல் மூலமாகவே படத்துக்கு கிடைக்கும் என்கின்றனர்.
லியோ படத்தை விட அதிகம்: தமிழ்நாட்டில் மட்டும் 750 தியேட்டர்களில் இந்தியன் 2 திரைப்படம் நாளை வெளியாகிறது. உலகம் முழுவதும் 5000க்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. விஜய் நடித்த லியோ திரைப்படம் அதிகபட்சமாக 4000+ ஸ்க்ரீன்களில் தான் வெளியானது. அதைவிட ஷங்கர் படத்துக்கு அதிக ஸ்க்ரீன்கள் கிடைத்துள்ள நிலையில், முதல் நாள் வசூல் அதிகமாகவே வரும் என்கின்றனர்.

பஞ்சாயத்து ஓவர்: இந்தியன் 2 படத்துக்கு எதிராக இருந்த அனைத்து பிரச்சனைகளையும் ஷங்கர் தரப்பு மற்றும் லைகா தரப்பு முடித்து வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டதாகவும், நாளை எந்தவொரு சிக்கலும் இல்லாமல் இந்தியன் 2 படம் தியேட்டர்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











