Actor Kamal haasan: ரிலீஸ் தள்ளிப் போகிறதா இந்தியன் 2 படம்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. இந்தப் படம் ஜூன் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக படக்குழு சார்பில் முன்னதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால் படத்தின் தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை. படம் ஜூன் 13ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என்று படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தின் பாடல் காட்சி ஒன்று இன்னும் ஷூட்டிங் நடத்தப்படாமல் உள்ளதாகவும் அதனால் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது தக் லைஃப் படத்தின் சூட்டிங்கிற்காக நடிகர் கமல்ஹாசன் டெல்லியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2 படம்: நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் வரும் ஜூன் மாதம் ரிலீசாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு சார்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே அறிவிப்பு வெளியானது. தற்போது ஜூன் மாதத்திலேயே கமல்ஹாசன் -பிரபாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி படத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் இரண்டு படங்கள் அடுத்தடுத்து சில தினங்களில் ரிலீசாக உள்ளது குறித்து ரசிகர்கள் மிகப்பெரிய உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்தியன் 2 படம் திட்டமிட்டபடி ஜூன் மாதத்தில் ரிலீசாகாது என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாடல் காட்சி சூட்டிங்: ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி உள்ளன. இதில் இந்தியன் 2 படம் ஜூன் மாதத்திலும் இந்தியன் 3 படம் கிறிஸ்துமஸை ஒட்டியும் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்ட சூழலில் இந்தியன் 2 படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சியை படமாக்க வேண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் சேனாபதி கேரக்டரின் பிரம்மாண்டமான வரைபடங்களுடன் இந்த பாடல் எடுத்து முடிக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் பாடல் காட்சி இன்னமும் படமாக்கப்படவில்லை என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளன.
தக் லைஃப் சூட்டிங்கில் கமல்ஹாசன்: நாடாளுமன்ற தேர்தல் பணிகளை நிறைவு செய்துள்ள கமல்ஹாசன், தற்போது தக் லைஃப் படத்தின் சூட்டிங்கிற்காக டெல்லியில் உள்ளார். இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் பாடல் காட்சி எப்போது எடுக்கப்படும் என்று இன்னும் திட்டமிடப்படவில்லை. லைகா நிறுவனத்தின் சில நிதி பிரச்சனைகள் காரணமாகவும் இந்த பாடல் காட்சி எடுப்பதில் தாமதமாகி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பாடல் காட்சி கண்டிப்பாக படத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பதில் இயக்குனர் ஷங்கர் உறுதியாக உள்ள சூழலில் படம் திட்டமிட்டபடி ஜூன் மாதம் வெளியாகுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
ரிலீஸ் தள்ளிப் போகிறதா இந்தியன் 2?: இந்தியன் 2 படம் ஜூன் 13ம் தேதி ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது. இந்தியன் 2 படம் ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதால், தனுஷ் இயக்கத்தின் உருவாகியுள்ள ராயன் படத்தின் ரிலீஸ் ஜூலை மாதத்திற்கு தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்தியன் 2 படம் குறிப்பிட்டபடி ஜூன் மாதத்தில் ரிலீசாகவில்லை என்றால் ஜூன் மாதத்திலேயே ராயன் படத்தின் ரிலீஸ் வைத்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பு தரப்பு திட்டமிட்டு வருவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











