Indian 2 Trailer Review: இது ஷங்கரின் தசாவதாரம்.. இந்தியன் 2 டிரெய்லர் நல்லா இருக்கா? இல்லையா?

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, விவேக், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

இன்று காலை இந்தியன் 2 டிரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில், திரையிடப்பட்ட டிரெய்லரை பார்த்து விட்டு ரசிகர்கள் அசந்து போய் விட்டனர். அடுத்ததாக மும்பையில் படத்தின் புரமோஷனை செய்ய ஷங்கர், கமல்ஹாசன், சித்தார்த் உள்ளிட்ட படக்குழு மும்பைக்கு விமானத்தின் மூலம் புறப்பட்டுள்ளனர்.

Indian 2 Kamal Haasan 2

அனிருத் இசையில் தாறுமாறு பிஜிஎம் உடன் இந்தியன் தாத்தா தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியளவில் நடைபெறும் ஊழலை தசாவதாரம் கமல்ஹாசன் போல 90 வயதில் ஏகப்பட்ட கெட்டப்புகளை போட்டுக் கொண்டு ஆக்‌ஷன் அதிரடியில் கலக்கும் டிரெய்லராக வெளியாகி இருக்கும் இந்த டிரெய்லர் நல்லா இருக்கா? இல்லையா? அதன் நிறை குறை என்ன என்பது குறித்த குட்டி விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

சேனாபதியின் தசாவதாரம்: இந்தியன் தாத்தா மற்றும் தசாவதாரம் கமல்ஹாசன் கலவையாக இந்தியன் 2 உருவாகி இருக்கும் என்பதை எந்தவொரு ரசிகரும் கற்பனை செய்துக் கூட பார்த்து இருக்க மாட்டார்கள். சினிமா பிரபலங்களுக்கே நிச்சயம் இந்தியன் 2 டிரெய்லர் ஷாக்கை கொடுத்திருக்கும். அந்தளவுக்கு இந்தியன் தாத்தா டோட்டலாக உருமாறி மீண்டும் தனது வர்மக் கலையால் இந்தியாவில் உள்ள களைகளை பறிக்க வந்து விட்டார்.

Indian 2 Kamal Haasan 2

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: இந்தியன் தாத்தா மீண்டும் வரவேண்டும் என சித்தார்த் ஏங்குவதும் இந்தியன் தாத்தாவை கற்பனையாக உருவாக்கி தன்னால் முடிந்த விஷயங்களை செய்வதுமாக இருந்து வருகிறார். ஆனால், மீண்டும் இந்தியன் தாத்தாவான சேனாபதி இந்தியாவுக்கு வந்து கதறவிடும் காட்சிகள் எல்லாம் வேறலெவலில் தெறிக்கிறது. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என திடீரென பிக் பாஸ் ஹோஸ்ட்டாகவும் மாறிவிடுகிறார் கமல்ஹாசன்.

Indian 2 Kamal Haasan 2

டிரெய்லர் எப்படி இருக்கு?: கம்பேக் இந்தியன் பாடலில் காட்டிய இந்தியன் 2 படத்துக்கும் தற்போது டிரெய்லரில் காட்டியிருக்கும் இந்தியன் 2 படத்துக்கும் ஏகப்பட்ட முன்னேற்றம் தெரிகிறது. ஷங்கரின் பிரம்மாண்ட விஷுவல் ட்ரீட், கமல்ஹாசனின் அதிரடி ஆக்‌ஷன் கலந்த இந்தியன் 2 படமாக தெரிகிறது. ஆனால், இந்தியன் படத்தில் இருந்த ஆன்மா இந்தியன் 2வில் ரொம்பவே மிஸ்ஸிங் என்பது போலவே தோன்றுகிறது. அதற்கான சில எமோஷன் காட்சிகளையும் வைத்திருந்தாலும், இது 2கே கிட்ஸுக்கான இந்தியன் 2வாகவே இருக்கும் என தெரிகிறது. 90ஸ் கிட்ஸ் நினைத்த இந்தியன் படமாக இந்தியன் 2 இருக்க வாய்ப்பில்லை. கரணம் தப்பினால் மரணம் என்பது போலத்தான் டிரெய்லர் வித்தியாசமான இந்தியன் தாத்தாவை பார்க்கப் போகிறோம் என்கிற உணர்வை கொடுத்தாலும், படம் பாஸ் ஆகிவிடுமா? என்கிற அச்சம் லேசாக எழுந்துக் கொண்டு தான் இருக்கிறது.

ஜாக்கி சான் தாத்தா: உலக நாயகனின் உழைப்பு பெரியது. 6 ஆண்டுகாலத்துக்கும் மேலாக உருவாக்கப்பட்ட படம் என்றாலும் அயலான் படத்தை போல காட்சிகள் பழசு போல தெரியாமல் ஐ, 2.0 படங்களை தொடர்ந்து ஷங்கர் படம் பார்க்கும் உணர்வையே டிரெய்லர் கடத்துகிறது. அந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வழியில் நான் போகிறேன் என்கிற வசனம் டாப் நாட்ச். 90 வயதிலும் இந்தளவுக்கு இந்தியன் தாத்தாவே ஜாக்கி சான் தாத்தா போல சண்டையிட வேண்டுமா என்கிற கேள்விகள் எழத்தான் செய்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X