Indian 2: இந்த தேதியில் தான் வெளியாகிறதா இந்தியன் 2?.. அதிகாரப்பூர்வ அப்டேட் சொல்வது என்ன?
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி உள்ளது.
சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் படம் இவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த சூட்டிங்கின் போது கிரேண் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குநர் உள்பட 3 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான இந்தியன் படம் தேசிய விருதுகளை வென்று தரமான வெற்றிப் பெற்ற நிலையில், பல வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்த கூட்டணி ஒரு வழியாக இந்தியன் 2 மட்டுமின்றி இந்தியன் 3 படத்தையும் முடித்து விட்ட நிலையில், விரைவில் இந்தியன் 2வை ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
தேர்தலுக்கு முன் வரல: இந்தியன் 2 திரைப்படம் தேர்தலுக்கு முன்னதாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படமும் தேர்தலுக்கு முன்னதாக வெளியாகவில்லை. லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் இணைந்து உருவாக்கி உள்ள இந்த படம் தேர்தலுக்கு முன்பு வரவில்லை என்றாலும், தேர்தலுக்கு முன்னர் அதற்கான ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் என நினைத்து ஊழல் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்கிற அறிவிப்புடன் இன்று படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளனர்.
ஜூன் ரிலீஸ்: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆனால், எந்த தேதியில் வெளியாகும் என்பதை இன்னமும் படக்குழு அறிவிக்காதது ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது.
இந்த தேதியில் ரிலீஸா?: ஆனால், சோஷியல் மீடியா மற்றும் சினிமா வட்டாரத்தில் இந்தியன் படம் வரும் ஜூன் 13ம் தேதி தான் வெளியாகிறது என்கிற தகவல் தற்போது தீயாக பரவி வருகிறது. ஜூன் மாதம் ரிலீஸ் என அறிவித்துள்ள நிலையில், ஜூன் 13ம் தேதி சரியான ரிலீஸ் தேதி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தியன் படம் கொடுத்த எஃபெக்ட்டை இந்தியன் 2 படம் கொடுக்குமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். இந்தியன் 3 திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இதை விட பெரிய சம்பவம் செய்யும் எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











