சிவகார்த்திகேயன் படத்துக்கு புது சிக்கல்.. கண்டிஷன் போட்ட ராஜ்கமல் நிறுவனம்?.. சோதனை மேல் சோதனை

சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்துக்கு கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் கண்டிஷன் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Kamal Haasans Rajkamal Company has a condition for the Sivakarthikeyan Movie

டி.இமான் தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். விஜய், அஜித், ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். அவர் இணைந்த ஹீரோக்களில் அவருக்கு பயங்கரமாக செட் ஆனவர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களுக்கு இமான் இசையமைத்த பாடல்கள் அனைத்துமே ஹிட்டடித்தவை.

குற்றச்சாட்டு: சூழல் இப்படி இருக்க இரண்டு பேரும் கடந்த சில வருடங்களாகவே இணைந்து பணியாற்றவில்லை. அதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் இருந்த சூழலில் இமான் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், "சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். அவர் செய்த துரோகத்தை வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன். எனது பிள்ளைகளின் நலனுக்காக அது என்ன துரோகம் என்று சொல்லமாட்டேன்" என்றார்.

மோனிகாவின் மறுப்பு: இமானின் இந்த குற்றச்சாட்டை அடுத்து அவரும் அவரது முதல் மனைவி மோனிகாவும் பிரிந்ததற்கு சிவகார்த்திகேயனே காரணம் என பலரும் பேச ஆரம்பித்தனர். ஆனால் மோனிகாவோ இமான் எடுத்த விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதனைத்தான் அவர் துரோகம் என்கிறார். வெளியில் உள்ளவர்கள் தவறாக புரிந்துகொள்கிறார்கள் என்று விளக்கமளித்தார்.

உடைந்த இமேஜ்: சிவகார்த்திகேயனை பொறுத்தவரை விஜய் தன்னுடைய ஆரம்ப காலத்தில் எப்படி சிறுவர்கள், சிறுமிகளை ரசிகர்களாக பிடித்தாரோ அதேபோல்தான் எஸ்கேவும் இருக்கிறார். முக்கியமாக அவருக்கு நம்ம வீட்டுப்பிள்ளை என்ற இமேஜும் ரசிகர்களிடம் இருக்கிறது. ஆனால் இமான் வைத்த குற்றச்சாட்டை அடுத்து அந்த இமேஜ் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் கண்டிருப்பதாக திரைத்துறையில் ஒருதரப்பினர் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

எஸ்கே 21: இந்த விவகாரம் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க சிவகார்த்திகேயன் கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21ஆவது படத்தில் நடித்துவருகிறார். அதில் அவர் ராணுவ வீரராக நடிக்கிறார். இந்நிலையில் எஸ்கே 21 படக்குழுவுக்கு ராஜ்கமல் நிறுவனம் கண்டிஷன் போட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Kamal Haasans Rajkamal Company has a condition for the Sivakarthikeyan Movie

அதாவது படக்குழு ஆரம்பத்தில் ஒரு பட்ஜெட்டை சொன்னதாகவும் தற்போது சொல்லியதைவிடவும் பட்ஜெட் எகிறிவிட்டது. எனவே படக்குழுவை தொடர்புகொண்ட ராஜ்கமல் நிறுவனம் போட்டதைவிட பட்ஜெட் அதிகம் செல்கிறது. எனவே செலவுகள் அதிகம் வைக்காதபடி இனி எடுக்கவிருக்கும் காட்சிகளுக்கு பிளான் செய்யுங்கள் என சொல்லியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் சிவாவும் படக்குழுவும் கொஞ்சம் அப்செட் ஆகியும் இருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X