அபூர்வ சிங்கீதம்.. ராஜபார்வை குறித்து நெகிழ்ந்த பிரபலங்கள்.. வீடியோவை வெளியிட்ட கமல் ஹாசனின் RKFI

சென்னை: கமல் ஹாசன் இந்திய சினிமாவின் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுபவர். அவர் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். ஒருபக்கம் நடிப்பு மறுபக்கம் அரசியல் என படு பிஸியாக இருக்கும் கமல் ஹாசன் சிங்கீதம் சீனிவாசராவை கௌரவப்படுத்தும் விதமாக, 'அபூர்வ சிங்கீதம்'என்ற நிகழ்வை ஒருங்கிணைத்திருக்கிறார். தற்போது அதுதொடர்பான ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.

கமல் ஹாசன் கடைசியாக விக்ரம் படத்தில் நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்தப் படத்தின் மூலம் தரமான வெற்றியை பதிவு செய்தார். அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதன்படி இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் படம் ஆகியவை தற்போது கமலின் லைன் அப்பாக இருக்கிறது. இடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்க கமிட்டானார். ஆனால் அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டது. அதற்கு பதிலாக சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

Kamal Haasan s RKFI Released a Video About Apoorva Singeetham Event

கமல் - மணிரத்னம்: கமல் ஹாசனும் மணிரத்னத்தும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் இன்றுவரை சிறந்த அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

டைட்டில் இன்ட்ரோ: இந்த சூழலில் படத்தின் பூஜையும், டீசர் ஷூட்டிங்கும் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அதில் கமல், மணிரத்னம் மற்றும் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர். அதனையடுத்து கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் நவம்பர் 6ஆம் தேதி படத்தின் டைட்டில் இன்ட்ரோ வீடியோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஷூட்டிங் அப்டேட்: இப்படத்தில் திரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர். ஏற்கனவே மன்மதன் அன்பு, தூங்கா வனம் ஆகிய படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் திரிஷா. இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக கமலுடன் நடிக்கிறார். மக்களவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் தற்போது அரசியல் களத்தில் கமலின் கவனம் இருக்கிறது. இதன் காரணமாக தக் லைஃப் படத்தின் ஷூட்டின் நிறுத்தப்பட்டிருக்கிறது.

Kamal Haasan s RKFI Released a Video About Apoorva Singeetham Event

அபூர்வ சிங்கீதம்: இதற்கிடையே தன்னை வைத்து அபூர்வ சகோதரர்கள், ராஜபார்வை (கமலின் 100ஆவது படம்) உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிங்கீத சீனிவாசராவை பெருமைப்படுத்தும் விதமாக அபூர்வ சிங்கீதம் என்ற நிகழ்வை கடந்த சில வாரங்களாக ஒருங்கிணைத்திருக்கிறார் கமல் ஹாசன். இதில் திரையுலக பிரபலங்கள், சிங்கீத சீனிவாச ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றிவருகின்றனர்.

கமல் வெளியிட்ட வீடியோ: இந்நிலையில் ராஜபார்வை திரைப்படம் ரிலீஸாகி இன்றுடன் 43 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதனையொட்டி அபூர்வ சிங்கீதம் நிகழ்ச்சி தொடர்பான ஒரு வீடியோ கமல் ஹாசனின் RKFI நிறுவனத்தின் அதிகார்பபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த வீடியோவில் கமல் ஹாசன், மணிரத்னம், சுஹாசினி, வைரமுத்து உள்ளிட்டோர் இருக்கின்றனர். மேலும் அவர்களுக்கு நடுவில் சிங்கீத சீனிவாச ராவ் அமர்ந்திருக்கிறார்.

Kamal Haasan s RKFI Released a Video About Apoorva Singeetham Event

அந்த வீடியோவில் மணிரத்னம் ராஜபார்வை படத்தில் தனக்கு பிடித்த ஷாட், காட்சிகள் குறித்து மிகவும் பெருமையாக பேசுகிறார். அதேபோல் கமல் ஹாசனும் ராஜபார்வை படத்தில் பணியாற்றியபோது ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. ராஜபார்வை கமலின் 100ஆவது படமாகும். ரிலீஸானபோது அந்தப் படம் சரியாக கவனிக்கப்படாவிட்டாலும் இப்போது ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X