Thug life movie: ஜெட் வேகம் காட்டும் இயக்குநர்.. 4வது ஷெட்யூலுக்காக கேரளா செல்லும் தக் லைஃப் டீம்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், திரிஷா, சிலம்பரசன், அசோக் செல்வன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் தக் லைஃப் படத்தின் 3வது கட்ட சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. முன்னதாக டெல்லி, ஜெய்சல்மார் ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாண்டிச்சேரியில் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டது.

இந்நிலையில் 3வது ஷெட்யூலாக நடந்த பாண்டிச்சேரி ஷெட்யூல் தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லவும் படக்குழுவினர் தற்போது திட்டமிட்டுள்ளனர். இடையில் கமல்ஹாசனின் தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்தின் சூட்டிங் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் சூட்டிங்கை இயக்குநர் மணிரத்னம் துரிதப்படுத்தி வருகிறார்.

Kamal haasan Thug life Maniratnam

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் 2 படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் கல்கி 2898 AD, இந்தியன் 2, இந்தியன் 3 படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்த மாதத்திலேயே கல்கி 2898 AD படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வரும் 10ம் தேதி இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார். படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் இதற்காக 150 கோடி ரூபாய் வரை கமல்ஹாசனுக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்: இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்த மாதத்தில் இந்தியன் 2 படம் வெளியாகவுள்ளது. கடந்த ஜூன் 1ம் தேதி படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப்படம் லைகா நிறுவன தயாரிப்பாக மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அடுத்த பாகம் அடுத்த ஆண்டு ஜனவரியில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் இந்தப் படத்தின் முதல் பாகமும் தற்போது ரீ -ரிலீஸ் செய்யப்பட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தக் லைஃப் பட சூட்டிங்: இந்த ஆண்டிலேயே கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகவுள்ள நிலையில், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே துவங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் சூட்டிங் நடத்தப்பட்டது. செர்பியாவில் திட்டமிடப்பட்ட சூட்டிங், கமல்ஹாசனின் தேர்தல் வேலைகளால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் அடுத்தடுத்த கட்ட சூட்டிங்கை துரிதப்படுத்தி வருகிறார் மணிரத்னம்.

ஸ்பீடு காட்டும் இயக்குநர்: பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று படத்தையே அவர் 155 நாட்களில் இரண்டு பாகங்களின் சூட்டிங்கை நிறைவு செய்த நிலையில், இந்தப் படம் இவ்வளவு நாட்கள் நீண்டுள்ளது. இதனிடையே தக் லைஃப் படத்தின் 70 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ளதாகவும் இன்னும் 40 நாட்கள் சூட்டிங் மீதமுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளது. தற்போது டெல்லி, ஜெய்சல்மார் உள்ளிட்ட இடங்களில் படத்தின் அடுத்தடுத்த கட்ட சூட்டிங்கை நிறைவு செய்துள்ள மணிரத்னம், கடந்த சில தினங்களாக பாண்டிச்சேரியிலும் அடுத்தக்கட்ட சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார்.

Kamal haasan Thug life Maniratnam

கேரளா சூட்டிங்கில் இணையும் திரிஷா: கேரளா சூட்டிங்கில் கமல்ஹாசன், சிம்பு மற்றும் அசோக் செல்வன் இணைந்த அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. தற்போது 3 கட்ட ஷெட்யூல் நிறைவடைந்துள்ள சூழலில், அடுத்ததாக கேரளாவில் அடுத்தக்கட்டமாக ப்ரீ -க்ளைமாக்ஸ் காட்சிகளின் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூட்டிங்கில் நடிகை திரிஷா இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஷெட்யூலை தொடர்ந்து பாங்காக், செர்பியா ஆகிய வெளிநாடுகளில் அடுத்தக்கட்ட சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X