Thug life: அதிக கோடிகளுக்கு விற்பனை ஆன தக் லைஃப் வெளிநாட்டு உரிமை.. விஜய்யை பீட் செய்த கமல்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன், திரிஷா, அபிராமி, சிம்பு, நாசர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் தக் லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் இணைந்துள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தின் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் முன்னதாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சத்யா படத்தின் லுக்கில் கமல்ஹாசன் காணப்பட்டார்.
படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத், ஜெய்சல்மார் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள சூழலில் தற்போது டெல்லியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூட்டிங்கில் கமல்ஹாசன் தற்போது இணைந்துள்ளார். மேலும் கமல்ஹாசன் -சிம்பு காம்பினேஷன் காட்சிகள் டெல்லியில் நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் கமல்ஹாசனின் மகனாக சிம்பு நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தக் லைஃப் படம்: நடிகர் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், வையாபுரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் தக் லைஃப் படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். கமல்ஹாசன் -மணிரத்னம் காம்பினேஷன் 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்தில் சத்யா பட லுக்கில் கமல்ஹாசன் காணப்படுகிறார். படத்தில் சிம்பு மற்றும் திரிஷா இருவரும் ஜோடியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் இந்த ஜோடி மேஜிக்கை நிகழ்த்திய நிலையில் தற்போது தக் லைஃப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கமலுடன் இணைந்த சிம்பு: முன்னதாக இந்தப் படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்திருந்த நிலையில், கால்ஷீட் பிரச்சினைகள் காரணமாக அவர்கள் இருவரும் படத்திலிருந்து விலகினர். இந்நிலையில் துல்கர் சல்மான் கேரக்டரில் தற்போது சிம்பு இணைந்துள்ளார். இந்நிலையில் ஜெயம் ரவி கேரக்டரில் அசோக்செல்வன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் டெல்லி சூட்டிங் நிறைவடைந்தவுடன் அடுத்தடுத்து பாங்காக், செர்பியா ஆகிய இடங்களில் படத்தின் சூட்டிங் நடத்தப்படவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் வாரத்திலேயே செர்பியாவில் இந்தப் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தக் லைஃப் படத்தின் ஓவர்சீஸ் உரிமை: இந்நிலையில் இந்தப் படத்தின் ஓவர்சீஸ் உரிமை 60 கோடி ரூபாய்களுக்கு மேல் விற்றுத் தீர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் முன்னதாக விஜய்யின் லியோ படத்தின் ஓவர்சீஸ் ரெக்கார்டை தற்போது தக் லைஃப் முந்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிம்பு இணைந்துள்ளது படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டரும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. கமல்ஹாசன் -மணிரத்னம் என இருபெரும் ஜாம்பவான் நீண்ட காலங்களுக்கு பிறகு இணைந்துள்ள தக் லைஃப் படத்தில் சிம்பு காம்பினேஷனையும் ரசிகர்கள் சிறப்பாக பார்த்து வருகின்றனர்.
சிம்புவின் அழுத்தமான கேரக்டர்: மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு தன்னுடைய படங்களை காத்திருந்து சிறப்பாக தேர்வு செய்து வருகிறார் சிம்பு. இந்நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர்48 படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்தார் சிம்பு. இந்தப் படத்திற்காக தன்னுடைய ஹேர்ஸ்டைல் உள்ளிட்டவற்றிலும் மாற்றம் காட்டினார். இந்நிலையில் இந்தப் படம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுவரும் சூழலில் தற்போது தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் இவரது கேரக்டர் மிகவும் அழுத்தமானதாக இருக்கும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











