Thug life movie: தக் லைஃப் படத்தில் இணையும் புதிய நடிகர்.. அறிவிப்பு எப்ப தெரியுமா?

டெல்லி: நடிகர் கமல்ஹாசன், திரிஷா, சிம்பு உள்ளிட்டவர்கள் நடித்து வரும் படம் தக் லைஃப். நாயகன் படத்தை தொடர்ந்து 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் கமல்ஹாசன் -மணிரத்னம் காம்போ இணைந்துள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் கிராமத்து பின்னணியில் இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, அபிராமி, நாசர், வையாபுரி ஆகியோர் காணப்படுகின்றனர். அதில் முன்னதாக வெளியான கமல்ஹாசனின் சத்யா பட லுக்கில் கமல் காணப்படுகிறார். முன்னதாக வெளியான இந்தப் படத்தின் டைட்டில் பிரமோவில் நீண்ட தாடி மற்றும் தலைமுடியுடன் காணப்பட்ட கமல்ஹாசன், தற்போது ஒட்ட வெட்டப்பட்ட தலைமுடியுடன் காணப்படுகிறார்.

Kamal haasan s Thug life team going to announce new including on 8th of May

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன். சிம்பு உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள படம் தக் லைஃப். இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதைக்களம் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகிவருகிறது. 36 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகிவரும் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. படத்தின் ஷூட்டிங் முன்னதாக சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த சூழலில் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. டெல்லியில் தொடர்ந்து ஒரு மாத காலங்கள் இந்த படத்தின் ஷூட்டிங் நடக்கவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

தக் லைஃப் பட சூட்டிங்: தொடர்ந்து பாங்காக் மற்றும் செர்பியா ஆகிய இடங்களில் அடுத்த கட்ட சூட்டிங்கை மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் சூட்டிங்கில் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் இன்றைய தினம் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோருடன் நாசர், அபிராமி, வையாபுரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த புகைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் சத்யா பட லுக்கில் காணப்படுகிறார். இந்நிலையில் இந்த படத்தில் இணைய உள்ள முக்கியமான நடிகர் குறித்து வரும் எட்டாம் தேதி அப்டேட் வெளியிட உள்ளதாக படக்குழு சார்பில் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அப்டேட்: இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்திருந்த சூழலில் அவர்கள் இருவரும் படத்தில் இருந்து விலகி உள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ராஜ்கமல் இன்டர்நேஷனல் பதிவுகளில் இவர்கள் இருவரின் பெயர்கள் டேக்குகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு இந்த படத்தில் களமிறங்கியுள்ள சூழலில் ஜெயம் ரவிக்கு பதிலாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் அரவிந்த்சாமி, அசோக் செல்வன் உள்ளிட்டவர்கள் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை மறுதினம் படக்குழு சார்பில் வெளியாகவுள்ள அப்டேட்டில் ஜெயம் ரவிக்கு பதிலாக படத்தில் இணையுள்ள நடிகர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் செர்பியாவில் சூட்டிங்: இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்தடுத்த ஷெட்யூல் சிறப்பாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த மாதம் முதல் வாரத்தில் செர்பியாவில் நடக்கவிருந்த ஷூட்டிங் கமல்ஹாசனின் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்கள் காரணமாக நடத்தப்படவில்லை. இதனால் ஏற்பட்ட கால்ஷீட் பிரச்சினை காரணமாக துல்கர் மற்றும் ஜெயம்ரவி படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது. இந்நிலையில் நாளை மறுதினம் படத்தில் இணையுள்ள முக்கியமான நடிகர் குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X