விண்வெளி நாயகா.. பட்டையை கிளப்பும் கமலின் தக் லைஃப் ட்ரெய்லர்.. யப்பா வேற லெவல்

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் திரைப்படம் தக் லைஃப். படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதிலும் கமலுடன் சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே கமலும், மணிரத்னமும் இணைந்து நாயகன் படத்தை கொடுத்திருக்கிறார்கள். எனவே இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்பு எழுந்த சூழலில் தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.

சினிமாவுக்கு குட்டி பிரேக் கொடுத்து அரசியலுக்கு சென்றார் கமல்ஹாசன். ஆனால் திரைத்துறையில் அவருக்கு கிடைத்த வரவேற்பு போல் அரசியல் களத்தில் கிடைக்கவில்லை. சூழல் இப்படி இருக்க மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்த அவர்; லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாக கொஞ்சம் பின்னடைவை சந்தித்தாலும் வசூல் ரீதியாக படம் சக்கைப்போடு போட்டது. மொத்தம் 400 கோடி ரூபாய்வரை அந்தப் படம் உலகம் முழுவதும் வசூல் செய்தது.

இந்தியன் 2: விக்ரம் கொடுத்த வெற்றி கமலுக்குள் மீண்டும் பழைய உற்சாகத்தை கொண்டுவந்தது. இதன் காரணமாக ஏற்கனவே கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தியன் 2 பணிகளை ரீ ஸ்டார்ட் செய்யும்படி ஷங்கருக்கு கோரிக்கை வைக்க; ஷங்கரும் பட பணிகளை தொடங்கினார். இந்தப் படத்தில் சில காட்சிகளை வசந்தபாலனும் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படமானது வெளியானது.

படுதோல்வியும், கடுமையான ட்ரோலும்: இந்தியன் முதல் பாகம் அதிரிபுதிரி ஹிட். எனவே இதுவும் அதுபோல் இருக்கும் என்ற நம்பிக்கையில் படம் பார்க்க சென்றார்கள் ரசிகர்கள். ஆனால் அவர்களது நம்பிக்கையில் தனது திரைக்கதை, மேக்கிங் உள்ளிட்டவைகள் மூலம் பெரிய தீயை வைத்தார் இயக்குநர். படம் படுதோல்வியை சந்தித்தது. தோல்வி மட்டுமின்றி கடுமையான ட்ரோலையும் அந்தப் படம் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan s Thug Life Trailer was out Now

தக் லைஃப் கமல்: இந்தியன் 2 படத்தில் பெற்ற அடிக்கு மருந்திடும் வகையில் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடிக்க கமிட்டானார் கமல். ஏற்கனவே இவர்கள் இணைந்து நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். எனவே இந்த முறையும் இக்கூட்டணி கண்டிப்பாக க்ளாசிக் பந்தயம் அடிக்கும் என்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

Take a Poll

நட்சத்திர பட்டாளம்: இதில் கமலுடன் சிம்புவும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். அநேகமாக கமலுக்கு சிம்பு மகனாக நடித்திருக்கலாம் அல்லது இரண்டு பேரில் ஒருவர்தான் வில்லன் என்று கூறப்படுகிறது. சிம்பு தவிர்த்து திரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். படத்திலிருந்து வெளியான ஜிங்குச்சா என்ற பாடல் பெரிய வரவேற்பை பெற்றது. சூழல் இப்படி இருக்க படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

வெளியான ட்ரெய்லர்: அதன்படி தக் லைஃப் ட்ரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது. ட்ரெய்லரில் பல ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. முக்கியமாக சிம்புவுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே சண்டை காட்சிகளும் இருக்கின்றன. எனவே இந்தப் படத்தில் சிம்புவும், கமல்ஹாசனும் எதிரிகள்தான் என்பது உறுதியாகியிருக்கிறது. மேலும் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக படம் பந்தயம் அடிக்கும் என்று உறுதியோடு கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X