தக் லைஃப் ரிலீஸ் தள்ளிப்போகுதா?.. கல்கி 2 படத்துக்கும் கால்ஷீட் கொடுக்கும் கமல்ஹாசன்.. செம பிஸி!

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 பாகங்களே 3 மாதங்களில் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே செல்வதாக கூறுகின்றனர். இந்த ஆண்டு தக் லைஃப் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியன் 2 பட தோல்வி படக்குழுவை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் தக் லைஃப் படத்தில் இருந்து துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டோர் வெளியேறிய நிலையில், சிம்பு உள்ளே வந்தார். ஏகப்பட்ட சொதப்பல்கள் ஏற்பட்ட நிலையில், படத்தின் மேக்கிங் பணிகள் தாமதமாகி வருகின்றன.

Kamal Haasan Thug Life

அதன் காரணமாக கண்டிப்பாக தக் லைஃப் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாக வாய்ப்பே இல்லை என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியன் 2 தோல்வி: ஷங்கர் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் கமல்ஹாசனுக்கு விக்ரம் படம் போல வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஸ்வரூபம் 2 போல படுதோல்வியை சந்தித்தது. இதுவரை எந்தவொரு கமல்ஹாசன் படமும் இந்தளவுக்கு ட்ரோல் ஆகியிருக்காது. அந்தளவுக்கு ட்ரோலான படமாக இந்தியன் 2 மாறியுள்ளது. இந்தியன் 3 படத்திற்கு மேலும், சில நாட்கள் ஷூட்டிங் நடத்தி அந்த படத்தை வெளியிட வேண்டும் என ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் லைகாவுக்கு கோரிக்கை வைத்திருப்பதாக கூறுகின்றனர். இந்தியன் 3 படம் தான் அடுத்த படமாக வெளியாகும் என்கின்றனர்.

தக் லைஃப் இந்த வருடம் வராது: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிறிஸ்துமஸ் ரிலீஸாக விடாமுயற்சி படம் தான் வெளியாகும் என்றும் தக் லைஃப் படம் வெளியாக வாய்ப்பில்லை என்கின்றனர். அடுத்த ஆண்டு சம்மருக்குத்தான் தக் லைஃப் திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அவசர கதியில் படத்தை சொதப்பி கொடுக்க வேண்டாம் என்றும் பொறுமையாக பார்த்து செதுக்கி கொடுக்க சில மாதங்களை எடுத்துக் கொள்ளலாம் என கமல்ஹாசன் கூறியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

கல்கி 2: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த கல்கி திரைப்படம் 1100 கோடி வசூலை தாண்டி ஷாருக்கானின் ஜவான் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. இந்நிலையில், கல்கி 2 படத்தின் படப்பிடிப்பையும் விரைவாக நடத்த அந்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கமல்ஹாசனிடம் அதிக நாட்கள் கால்ஷீட்டும் கேட்கப்பட்டு இருக்கிறதாம். மேலும், அன்பறிவ் மாஸ்டர்களின் படத்தில் கமல் நடிக்க உள்ளநிலையில் தான் பிக் பாஸ் நடத்த முடியாது என அவர் முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X