Simbu: சென்னையில் நடந்த தக் லைஃப் சூட்டிங்.. சிம்பு என்னமா இருக்காரு.. ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் திரைப்படம் தக் லைஃப். இந்தப் படத்தினை இயக்குநர் மணிரத்னம் இயக்கி வருகின்றார். இந்தப் படத்தில் சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கின்றார். இதுமட்டும் இல்லாமல் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தக் லைஃப் படத்தி படப்பிடிப்பு சென்னை தி. நகரில் நடைபெற்றுள்ளது. அது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகின்றது.
விக்ரம் படத்தின் மாஸான ஹிட்டுக்குப் பின்னர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் கமல் ரசிகர்களுக்கு அடுத்துள்ள நம்பிக்கை என்றால் அது தக் லைஃப் படம் தான். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிம்புவும் நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், சிம்பு மீது கமல் மற்றும் மணிரத்னத்திற்கு உள்ள அபிப்ராயம்தான் என கூறப்படுகின்றது. இதற்காகவே கமலுக்கு இணையான கதாபாத்திரத்தினை சிம்புவுக்கு கொடுத்துள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றது.

நாயகன் படத்திற்குப் பின்னர் கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணி இணையும் படம் தக் லைஃப் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இதற்காககவும் படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்த பின்னர் படத்தின் முதல் பாதியைப் பார்த்த உலக நாயகன் கமல்ஹாசன், மிகவும் முக்கியமான கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதாவது படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பை முடித்தப் பின்னர், சீக்கிரம் ரிலீஸ்க்கான வேலைகளைப் பார்த்து, படத்தினை டிசம்பரில் ரிலீஸ் செய்துவிடவேண்டும் எனக் கூறியுள்ளார்.

அயர்லாந்து: கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை, ராஜஸ்தான், டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. 60 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழு தரப்பில் கூறப்படுகின்றது. அதேநேரத்தில் படப்பிடிப்பு முடிய முடியவே படத்தின் டப்பிங் பணிகளும் நடந்து முடிந்துள்ளது. குறிப்பாக கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா ஆகியோர் தங்களது டப்பிங்கை முடித்துவிட்டனர் எனவும் கூறப்படுகின்றது. அடுத்தகட்டப் அயர்லாந்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது.

சிம்பு: இந்நிலையில் படத்தின் படப்பிப்பு சென்னையின் மிகவும் முக்கியமான பகுதியான மற்றும் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமான தி. நகர் எனப்படும் தியாகராய நகரில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்தப் படப்பிடிப்பில் சிம்பு தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் சிம்பு வந்ததை அங்கிருந்த பலர் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











