அசீமுக்கு இப்படியொரு பனிஷ்மென்ட்டை எதிர்பார்க்கலையே.. வெளியே கிளம்புங்க அசல்.. பாவம் நிவாஷினி!

சென்னை: இந்த வாரமும் விளிம்பில் தொற்றிக் கொண்டு நிற்கும் மகேஸ்வரிக்கு தான் எப்படியோ தப்பித்து விடுவோம் என்கிற தன்னம்பிக்கை எங்கே இருந்து வந்தது என்றே தெரியவில்லை.

கடந்த வாரமே வெளியே போகிறேன் என அழுது ஆர்ப்பாட்டம் பண்ணவரா இப்படி பேசுகிறார் என ரசிகர்கள் நினைத்து வருகின்றனர்.

அசீமை கடைசியில் டேஞ்சர் ஜோனில் உட்கார வைத்து சரியான சவுக்கடி கொடுத்துள்ளார் கமல் என பிக் பாஸ் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

விளிம்பில் மகேஸ்வரி

விளிம்பில் மகேஸ்வரி

கடந்த வாரம் மகேஸ்வரியா, சாந்தியா என இருந்த நிலையில், சாந்தி வெளியேறினார். உடனடியாக அவ்வளவு சண்டை போட்ட அசீமை எல்லாம் முதலில் சேவ் செய்து விட்டார்கள், நான் எதுக்கு இன்னும் இருக்கணும் என அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். இந்நிலையில், இந்த வாரம் அசீமுக்கு துணையாக நின்று அந்த பேச்சு பேசிய மகேஸ்வரியை மீண்டும் கடைசியில் உட்கார வைத்து விட்டார் கமல்.

சரியான தண்டனை

சரியான தண்டனை

அசீமுக்கு ரெட் கார்டு கொடுக்காமல் இப்படியே வார வாரம் உள்ளேயே வச்சு செய்யுங்க கமல் சார். வெளியே அனுப்பி விட்டால், பெரிதாக தண்டனை கொடுத்தது போல இருக்காது. இப்படி ஒவ்வொரு வாரமும் அசிங்கப்பட்டால் தான் புத்தி வரும் என அசீம் கடைசி 3 பேரில் ஒருவராக உட்கார வைத்ததே பெரிய தண்டனை என பிக் பாஸ் ரசிகர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

அசல் இருக்கணும்

அசல் இருக்கணும்

இந்த 3 பேரில் யார் வெளியே போவாங்க நீங்க சொல்லுங்க நிவா என கமல் சரியான இடத்தை பார்த்து காய் நகர்த்தியதும் அசல் இருக்கணும் சார் என நிவாஷினி இப்பவே தொண்டை அடைத்துப் போன குரலில் பேச ஆரம்பித்து விட்டார். அடுத்து அசல் தான் இந்த வாரம் எவிக்ட் ஆகி வெளியே போகிறார் என்கிற செய்தியை அறிந்ததும் எப்படி அழப் போகிறார் பாருங்க என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

அசல் கோலார் அவுட்

அசல் கோலார் அவுட்

இந்த வாரம் அசல் கோலார் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார் என்கிற சுவாரஸ்யமான தகவலும் வழக்கம் போல லீக் ஆகிவிட்ட நிலையில், அசல் கோலார் அவுட் ஆகும் ரியாக்‌ஷனும் அதற்கு நிவா போடப் போகும் டிராமாவையும் பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக இன்றைய எபிசோடுக்கு காத்திருக்கின்றனர்.

பெயர் கெட்டுப் போச்சு

பெயர் கெட்டுப் போச்சு

கானா பாடகராக கலக்கலாக உள்ளே வந்த அசல் கோலார் கொஞ்சம் கூட கண்ணியமாக நடந்து கொள்ளாமல் பெண் போட்டியாளர்களே அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்ட நிலையில், உடனடியாக இவரை வீட்டு விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என பிக் பாஸ் ரசிகர்கள் நினைத்த நிலையில், அசல் கோலார் பெயரை கெடுத்துக் கொண்டு வெளியேறுகிறார்.

பயண வீடியோ

பயண வீடியோ

அசல் கோலாரின் பயண வீடியோ முழுவதுமே தினம் ஒரு சில்மிஷக் காட்சிகளாகத்தானே இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அசல் கோலார் வெளியே போய் விட்டால் பிக் பாஸ் வீடு ரொம்பவே டல் அடித்து விடுமே என்றும் அசல் ரசிகர்கள் இனி அந்த மாதிரி வீடியோ எல்லாம் வராதா? என ஃபீல் பண்ணி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X